பூசணி
From Wikipedia, the free encyclopedia
பூசணி, (ஒலிப்புⓘ, பேரினம் : Cucurbita spp.) சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா[1] ஆகும்.
- சொற்பொருள்
விரைவான உண்மைகள் பூசணி, உயிரியல் வகைப்பாடு ...
பூசணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Cucurbitales |
குடும்பம்: | வெள்ளரிக் குடும்பம் |
பேரினம்: | Cucurbita spp. |
இனங்கள் | |
C. maxima |
மூடு
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.[சான்று தேவை]