இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia
புஷ்யபூதி வம்சம் (Pushyabhuti dynasty ), வர்தன வம்சம் என்றும் அழைக்கப்படும், இது 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டது. இந்த வம்சம் அதன் கடைசி ஆட்சியாளரான ஹர்சவர்தனரின் (கி.பி. 590-647 பொ.ச.) கீழ் அதன் உச்சத்தை எட்டியது. ஹர்சப் பேரரசு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி இருந்தது. மேலும் கிழக்கில் காமரூபம் முதல் தெற்கே நருமதை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. வம்சம் ஆரம்பத்தில் இசுதான்விச்வராவில் இருந்து (நவீன குருச்சேத்திரம், அரியானா ) ஆட்சி செய்தது. ஆனால் ஹர்சர் இறுதியில் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி, உத்தரப் பிரதேசம் ) தனது தலைநகராக மாற்றினார். அங்கிருந்து அவர் கி.பி 647 வரை ஆட்சி செய்தார்.
வர்தன வம்சம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
c.500–c.647 CE | |||||||||||||||||||
ஹர்ஷவர்தனர் காலத்து நாணயங்கள், சுமார் 606-647 பொ.ச. முற்பகுதி: தலையில் மகுடத்துடன் ஹர்சவர்தனர் . பின்பகுதி: தனது இறக்கைகளுடன் கருடன் நின்று கொண்டிருக்கும் தோற்றம்.[2]
| |||||||||||||||||||
தலைநகரம் | Sthanvishvara (நவீன தானேசர்) கன்யாகுப்ஜம் (நவீன கன்னோசி) | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• தொடக்கம் | c.500 | ||||||||||||||||||
• முடிவு | c.647 CE | ||||||||||||||||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.