![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Athene_brama_1.jpg/640px-Athene_brama_1.jpg&w=640&q=50)
புள்ளி ஆந்தை
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
புட்டா/புள்ளி ஆந்தை (Athene brama) என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஒரு வகையான சிறு ஆந்தையினம். இவை பொதுவாகக்காணப்பெறும் பறவையினம். காடுகள் மட்டுமின்றி தோட்டங்கள், வயல்வெளிகள் மற்றும் மனித வாழ்விடங்களின் அருகிலும் தென்படும். இவை சிறு கூட்டங்களாக மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் இளைப்பறும். இவை இலங்கையில் காணப்படவில்லை. ஆனால் பாக் நீரிணையில் இராமேஸ்வரத்திற்கு 30 கிமீ தொலைவு வரை தென்படுகின்றன. எலிகளும் மற்ற கொரிப்பான்களும் மனிதரின் வாழும் இடங்களில் காணப்பெறுவதால் இவை நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிறைய வாழும்.[2] வாசம் செய்யும் இடத்திற்கேற்ப இவை வண்ணங்களில் சிலபல மாற்றங்களைக்காட்டுகின்றன.
விரைவான உண்மைகள் புட்டா ஆந்தை, காப்பு நிலை ...
புட்டா ஆந்தை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Strigiformes |
குடும்பம்: | Strigidae |
பேரினம்: | Athene |
இனம்: | A. brama |
இருசொற் பெயரீடு | |
Athene brama (Temminck, 1821) | |
![]() | |
வேறு பெயர்கள் | |
Carine brama |
மூடு