![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Blackbuck_male_female.jpg/640px-Blackbuck_male_female.jpg&w=640&q=50)
புல்வாய்
மான் வகை / From Wikipedia, the free encyclopedia
புல்வாய் (Blackbuck) என்பது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது.[1] இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன.[2] இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 கிமீ (40-60 மைல்) வேகத்தில் பாய்ந்து செல்லும்[3]. இவ்விலங்கு ஆந்திரப்பிரதேச மாநில விலங்காகும்.
புல்வாய் Blackbuck | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்டியோடாக்டைலா |
குடும்பம்: | போவிடே |
துணைக்குடும்பம்: | ஆண்டிலோபின்னே |
பேரினம்: | ஆண்டிலோப் பாலாசு, 1766 |
இனம்: | ஆ. செர்விகேப்ரா |
இருசொற் பெயரீடு | |
ஆண்டிலோப் செர்விகேப்ரா (லின்னேயஸ், 1758) | |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Blackbuck_%28Antilope_cervicapra%29-_Male_%26_female_in_Hyderabad%2C_AP_W_IMG_7268.jpg/640px-Blackbuck_%28Antilope_cervicapra%29-_Male_%26_female_in_Hyderabad%2C_AP_W_IMG_7268.jpg)