3-குளோரோ-1-புரோப்பைன் From Wikipedia, the free encyclopedia
புரோபார்கைல் குளோரைடு (Propargyl chloride) என்பது C3H3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-குளோரோ-1-புரோப்பைன் என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். தெளிவான பழுப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் உயர் நச்சுத்தன்மையுடன் தீப்பற்றும் பண்பைக் கொண்டதாக உள்ளது. இது தண்ணிரீரில் கரையாது. ஆனால் பென்சீன் மற்றும் எத்தனாலில் கலக்கும். புரோபார்கைல் குளோரைடின் ஒளிவிலகல் எண் 1.4350 ஆகும். பொதுவாக அரிப்புத் தடுப்பியாகவும் மண்புகையூட்டம் மூலம் தொற்றுயிரிகளைக் கட்டுப்படுத்தவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கரிமத் தொகுப்பு வினைகளில் இடைநிலைச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-குளோபுரோப்-1-ஐன் | |
வேறு பெயர்கள்
புரோபார்கைல் குளோரைடு, 3-குளோரோபுரோபைன், 1-குளோரோ-2-புரோபைன், 2-புரோபைல் குளோரைடு, காமா-குளோரோ அல்லைலீன், யூஎன் 2345 | |
இனங்காட்டிகள் | |
624-65-7 | |
ChemSpider | 21112738 |
EC number | 210-856-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12221 |
| |
பண்புகள் | |
C3H3Cl | |
வாய்ப்பாட்டு எடை | 74.51 g·mol−1 |
தோற்றம் | தெளிவான பழுப்பு |
அடர்த்தி | 1.0306 கி/செ.மீ3 |
உருகுநிலை | −78 °C (−108 °F; 195 K) |
கொதிநிலை | 57 °C (135 °F; 330 K) |
கரையாது | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | எளிதில் தீப்பற்றும் (F+), உயர் நச்சு (T+) |
R-சொற்றொடர்கள் | R23/24/25 R34 |
S-சொற்றொடர்கள் | S16 S23 S24/25 S36/37 S39 S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 18 °C (64 °F; 291 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோபார்கைல் குளோரைடு ஆல்ககாலுடன் வினைபுரிந்து புரோபார்கைல் எசுத்தர்களைக் கொடுக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.