From Wikipedia, the free encyclopedia
வீர புரன் அப்பு (Vira Puran Appu, சிங்களம்: පුරන් අප්පු) என அழைக்கப்படும் வீரகென்னாதிகே பிரான்சிசுக்கோ பெர்னாண்டோ (Weerahennadige Francisco Fernando, 7 நவம்பர் 1812 - 8 ஆகத்து 1848) இலங்கை வரலாற்றில் விடுதலைக்காகப் போராடிய குறிப்பிடத்தக்க ஒரு நபர். இவர் இலங்கையின் மேற்கே மொறட்டுவை நகரில் உயன பிரதேசத்தில் பிறந்தவர். தனது 13ம் வயதில் தான் பிறந்த இடத்தை விட்டு தனது வழக்கறிஞரான மாமனாருடன் இரத்தினபுரி சென்று அங்கு வாழ்ந்து வரலானார். தனது நாடு, மதம், இனம் என்பவற்றிற்கு தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிற்கு எதிராக 1848 விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கடப்பொல தேரரின் வழிகாட்டலில் மாத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார். எனினும் இப்போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவர் கைது செய்யப்பட்டு 1848 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் நாள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
வீர புரன் அப்பு Veera Puran Appu | |
---|---|
மாத்தளையில் வீர புரன் அப்புவிற்கு நினைவுச் சின்னம் | |
பிறப்பு | வீரஹென்னதிகே பிரான்சிஸ்கோ பெர்னான்டோ நவம்பர் 7, 1812 [1] உயன, மொறட்டுவை[2] |
இறப்பு | ஆகத்து 8, 1848 35)[1] போகம்பரை சிறைச்சாலை, கண்டி, பிரித்தானிய இலங்கை[2] | (அகவை
இறப்பிற்கான காரணம் | பிரித்தானியரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை |
இருப்பிடம் | இரத்தினபுரி, சபரகமுவா மாகாணம், இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
மற்ற பெயர்கள் | புரன் அப்பு பிரான்சிஸ்கோ பெர்னாண்டோ |
இனம் | சிங்களவர் |
பணி | அரசியல், பொருளாதார, சமூகப் புரட்சியாளர் |
அறியப்படுவது | 1848 எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர் |
சொந்த ஊர் | மொறட்டுவை, மேல் மாகாணம், இலங்கை |
உயரம் | 5அடி 7½ அங். |
பெற்றோர் | கலிஸ்தோரு பெர்னாண்டோ எலனா[2] |
வாழ்க்கைத் துணை | பண்டார மெனிக்கே (1847)[3] |
பிள்ளைகள் | ஒரு மகள்[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.