From Wikipedia, the free encyclopedia
புன்னிலப் பக்கி (Savanna nightjar)(கேபரிகசு அபினீசு) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை இரவு பக்கி ஆகும். எட்டு துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: கே. அ. மான்டிகோலசு, கே. அ. அமோயென்சிசு, கே. அ. இசுடிக்டோமசு, கே. அ. அபினிசு, கே. அ. திமோரென்சிசு, கே. அ. கிரிசேடசு, கே. அ. மைண்டனென்சிசு மற்றும் சி. ஏ. புரோபின்கசு.[2] இதன் வாழ்விடம் திறந்தவெளி காடுகள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகள் ஆகும். இதன் நீளம் சுமார் 25 cm (9.8 அங்) ஆகும். உடலின் மேல் பகுதிகள் பழுப்பு-சாம்பல் மற்றும் புழுவார்த்தமாதிரி, வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும்.[3] கீழ்ப்பகுதி பழுப்பு நிறத்தில், சிறிய கோடுகளுடன் இருக்கும். புன்னிலப் பக்கி இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இதன் சிறப்பியல்பான உரத்த சிணுங்கல் இதனை அடையாளம் காணப்பயன்படக்கூடியது.[3] முக்கியமாக மாலை நேரத்தில் பறக்கும் போது இந்த சிணுங்கல்கள் கேட்கும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் இது ஒரு பெரிய வரம்பினையும் எண்ணிக்கையினையும் கொண்டுள்ளது.[1]
புன்னிலப் பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேப்ரிமுல்கசு |
இனம்: | கே. அபினீசு |
இருசொற் பெயரீடு | |
கேப்ரிமுல்கசு அபினீசு கோர்சூபீல்டு, 1821 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.