புசிமி இனாரி தையிசா
From Wikipedia, the free encyclopedia
புசிமி இனாரி தையிசா (Fushimi Inari-taisha) என்பது நிப்பானில் கியோட்டோவில் புசிமி-கு வில் உள்ள நிப்பானிய "காமி" எனப்படும் தொல் இயற்கை வழிபாட்டுக் கோயில். இது இனாரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கடல் பட்டத்தில் இருந்து 233 மீ உயரத்தில் உள்ளது. இம்மலையில் சிறியதாக வேறு பல கோயில்களும் உள்ளன. இம்மலையில் ஏறி இறங்க ஏறத்தாழ 2 மணிநேரம் ஆகும்[1] .
புசிமி இனாரி-தையிசா Fushimi Inari-taisha 伏見稲荷大社 | |
---|---|
தோரி பாதை. புசிமி இனாரி-தையிசா கோயிலில் தொங்கு விளக்கு | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | புசிமி-கு, கியோட்டோ, கியோட்டோ, கியோட்டோ மாவட்டம், நிப்பான் |
புவியியல் ஆள்கூறுகள் | 34°58′2″N 135°46′22″E |
சமயம் | சிந்தோ |
இணையத் தளம் | inari |
இனாரி முதலிலும் இப்பொழுதும் முதன்மையாக அரிசி/நெல் "காமி" (கடவுள்) ஆகவும் வேளாண்மைக் கடவுளாகவும் உள்ளது. தொழில் செய்வோர் தொழிலின் கடவுளாகவும் கொள்கின்றார்கள்[மேற்கோள் தேவை]. புசிமி இனாரி-தையிசாவின் தோராயமான 10,000 "தோரி"களை (வாயில் முகப்பு) தொழில் முதலாளி ஒருவர் நன்கொடையாகத் தந்தார். இவற்றுள் 800 தோரிகள் ஒரு குகையுள் நுழைவது போன்ற தோற்றம் தருகின்றன[2].
இந்தக் கோயிலின் பரவலான புகழால் ஏறத்தாழ 32,000 கிளைக்கோயில்கள் நிப்பான் முழுவதும் உள்ளனவாம்[3].