புக்கிட் பெருந்தோங்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
புக்கிட் பெருந்தோங், (மலாய்: Bandar Bukit Beruntung; ஆங்கிலம்: Bukit Beruntung; சீனம்: 武吉伯伦东); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 48 கி.மீ. வடக்கே உள்ளது.
புக்கிட் பெருந்தோங் | |
---|---|
Bukit Beruntung | |
ஆள்கூறுகள்: 3°25′27″N 101°33′20″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு சிலாங்கூர் மாவட்டம் |
நிர்வாக மையம் | கோலா குபு பாரு |
உருவாக்கம் | 1990-களில் |
அரசு | |
• ஊராட்சி | உலு சிலாங்கூர் ஊராட்சி (Ulu Selangor District Council) |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 1,99,600 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 48300[1] |
தொலைபேசி எண்கள் | +603-602 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mdhs |
இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ள நகரம் புக்கிட் செந்தோசா (Bukit Sentosa). அதற்கு அடுத்த நிலையில் அருகிலுள்ள நகரங்கள் ராசா, (Bandar Rasa), செரண்டா (Serendah) மற்றும் பத்தாங்காலி (Batang Kali) நகரங்கள் ஆகும்.
புக்கிட் பெருந்தோங் நகரம் ஒரு திட்டமிட்ட நகரம்; தாலாம் கார்ப்பரேசன் நிறுவனத்தால் (Talam Corporation Berhad) உருவாக்கப்பட்டது. இந்த நகரத்தில்தான் பிரபலமான புக்கிட் பெருந்தோங் குழிப்பந்தாட்டம் திடல் (Bukit Beruntung Golf & Country Club) உள்ளது.[2]
1995-ஆம் ஆண்டில் புக்கிட் பெருந்தோங் நகரம்; இரண்டாவது பெட்டாலிங் ஜெயாவாக உருவாகலாம் எனும் வதந்தி பரவியது. அத்துடன் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Lumpur International Airport) உலு சிலாங்கூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ளதாகவும் பேசப்பட்டது.[3]
அத்துடன் புக்கிட் பெருந்தோங் நகருக்கு அருகில் உள்ள புக்கிட் தாகார் (Bukit Tagar) எனும் இடத்திற்கு கோலாலம்பூர் குதிரை பந்தயத் திடலும்; பத்தாங்காலி உலு யாம் (Ulu Yam) பகுதிக்கு மலேசிய விலங்கியல் பூங்காவையும் மாற்றப் படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டது.
அதனால் பொதுமக்கள் அங்கு அசையா சொத்துகளை வாங்குவதற்குப் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வந்தனர். அந்த வகையில் ஆயிரக் கணக்கான குடியிருப்பு வீடுகளும்; கடைவீடுகளும் பொதுமக்களால் வாங்கப்பட்டன. அசையா சொத்துகளின் விலையும் உயர்ந்தது.
ஆனால் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிப்பாங் புறநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இப்போதைக்கு புக்கிட் பெருந்தோங்கில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் (Abandoned Buildings) இன்றும் உள்ளன.[3]
அத்துடன் புக்கிட் பெருந்தோங் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை (Scarce Infrastructure); பொது வசதிகளின் மோசமான பராமரிப்பு (Poor Maintenance of Public Facilities); மற்றும் அடிப்படை வசதிகளின் (Basic Amenities) கடுமையான பற்றாக்குறை; ஆகியவற்றின் பார்வையில் அந்த நகரப்பகுதி இப்போது அழகில்லாத நிலையில் மங்கிப் போய் காணப்படுகிறது.[3]
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு வழித்தடம் வழியாகவும் (North–South Expressway Northern Route); மற்றும் மலேசிய கூட்டரசு சாலை 3208 வழியாகவும் (Malaysia Federal Route 3208); புக்கிட் பெருந்தோங் சாலை சந்திப்பு - 118 வழியாகவும் (Jalan Bukit Beruntung) புக்கிட் பெருந்தோங் நகரை அணுகலாம்.[4]
பொது போக்குவரத்தைப் பொறுத்தவரை, KA11 செரண்டா கொமுட்டர் நிலையம் (Serendah Komuter Station) மற்றும் KA12 பத்தாங்காலி கொமுட்டர் நிலையம் (Batang Kali Komuter Station) ஆகியவை மிக அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.
அண்மைய ஆண்டுகளில், புக்கிட் பெருந்தோங் தொழில்துறைப் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் தொழிற்சாலைகள், பொருள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உற்பத்தித் தளங்களைத் திறந்துள்ளன. இது இங்கு அண்மையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றமாகவே கருதப்படுகிறது.[5]
Apartment Seri Seroja)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.