புகிட்னொன்
பிலிப்பைன்ஸின் வடக்கு மிண்டனாவோ மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
புகிட்னொன் (Bukidnon) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மலேபலே ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2]இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜோச் மரியாபார். சுபிரி. ஜேஆர். (Jose Maria R. Zubiri, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 10,498.59 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015-ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக புகிட்னொன் மாகாணத்தின் சனத்தொகை 1,415,226 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 3-ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 16-ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 130 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 61-ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 464 கிராமங்களும், 20 மாநகராட்சிகளும் உள்ளன.
புகிட்னொன் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | வடக்கு மின்டனவு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |