From Wikipedia, the free encyclopedia
பீற்றா (Beta, கிரேக்கம்: βήτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது இரண்டு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான பெத்திலிருந்தே () பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து B, சிரில்லிய எழுத்துகள் Б, B என்பனவாகும்.
அச்சுப் பதிப்பின்போது சில வேளைகளில் செருமானிய எழுத்தான ß பீற்றாவுக்குப் பதிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
அறிவியலில் பீற்றாத் துகள், பீற்றாச் சிதைவு முதலிய சொற்களில் பீற்றா பயன்படுத்தப்படுகின்றது.
பீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
---|---|---|---|
கிரேக்கப் பேரெழுத்துப் பீற்றா | Β | U+0392 | Β Β |
கிரேக்கச் சிற்றெழுத்துப் பீற்றா | β | U+03B2 | β β |
கிரேக்கப் பீற்றாக் குறியீடு | ϐ | U+03D0 | ϐ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.