பீட்டில்ஸ்
From Wikipedia, the free encyclopedia
பீட்டில்ஸ் (The Beatles) இங்கிலாந்தின் லிவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த புகழ்பெற்ற ஒரு ராக் இசைக்குழுவாகும்.[1] 1960-ல் இக்குழு உருவானது. 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இசைக்குழு வரலாற்றில் இவர்களுடைய காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலுமே தனிப்பெருமை வாய்ந்த குழுவாக இருந்த பெருமை பீட்டில்ஸையே சாரும். மிகவும் புகழ் பெற்ற இசைக்குழுவாக இவர்கள் வளர்ந்தபோது, பீட்டில்மேனியா எனப்படும் அளவுக்கு இக்குழுவின்மீது ரசிகர்களிடையே மிகுந்த பற்று வளர்ந்தது. அவர்களின் பாட்டுக்களும் நாளாக நாளாக மிகவும் முன்னேற்றம் அடைந்தது. வளர்ச்சித் தத்துவங்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த அவர்களின் பாட்டுக்கள் 1960-களில் சமூக மற்றும் கலாச்சார புரட்சிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பீட்டில்ஸ் | |
---|---|
1964ஆம் ஆண்டின் "நான்கு நண்பர்கள்"
வலஞ்சுழியாக: இடது மேல் படம்: ஜான் லெனான்(John Lennon), வலது மேல் படம்: பால் மாக் கார்ட்னி (Paul McCartney), வலது கீழ்ப் படம்: ரிங்கோ ஸ்டார் (Ringo Starr) மற்றும் இடது கீழ்ப் படம்: ஜார்ஜ் ஹாரிசன்(George Harrison) | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | Liverpool, England |
இசை வடிவங்கள் |
|
இசைத்துறையில் | 1960–1970 |
வெளியீட்டு நிறுவனங்கள் | தளப் பட்டியல்: *பார்லோபோன் (Parlophone) * ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் (Apple Records) * காபிடல் ரெக்கார்ட்ஸ் (Capitol Records) |
இணைந்த செயற்பாடுகள் | தளப் பட்டியல்: * கற்சுரங்க மனிதர்கள் (The Quarrymen) * பில்லி பிரெஸ்டன் (Billy Preston) * பிளாஸ்டிக் ஓனோ பாண்டு |
இணையதளம் | thebeatles |
முன்னாள் உறுப்பினர்கள் |
பார்க்க: உறுப்பினர்கள் |