From Wikipedia, the free encyclopedia
பீட்டாட்ரான் (Betatron) என்பது ஒரு சுழல் துகள் முடுக்கியாகும். இது வளைய வடிவ வெற்றிடக் குழாயைத் தனது இரண்டாம் நிலை (secondary) சுருளாகக் கொண்ட மின்மாற்றியாகும். மின்மாற்றியின் முதலாம் நிலை (primary) சுருளுக்கு மாறுதிசை மின்னோட்டம் வழங்கப்பட்டு, வெற்றிடத்தில் வட்டப்பாதையில் இலத்திரன்கள் முடுக்கப்படுகின்றன. இலத்திரன் துப்பாக்கி மூலம் பெறப்படும் இலத்திரன் கற்றைகள் முடுக்க உருவாக்கப்பட்ட முதல் கருவியே பீட்டாட்ரான் ஆகும்.
1935 ல் செர்மனி நாட்டைச் சேர்ந்த மேக்சு ச்டீன்பெக் (Max Steenbeck) இலத்திரன்களை முடுக்கும் பீட்டாட்ரானை உருவாக்கினார்.[1][2][3][4][5][6] ஆனால் இதன் கருத்துரு ரூல்ப் வைடுரோவால் (Rolf Widerøe) உருவாக்கப்பட்டது.[7][8] இவர் உருவாக்கிய தூண்டல் துகள் முடுக்கி (induction accelerator) சரியாக இலத்திரன்களைக் குவிக்காததால் தோல்வியடைந்தது,[9] 1940 ல் அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கெர்சுட் (Donald Kerst) இக் கருவிக்கு முழு வடிவம் கொடுத்தார். [10][11][12]
பாரடேயின் மின் காந்தத் தூண்டல் தத்துவத்தில் செயல்படும் மி்ன்மாற்றிகளைப் போன்றே செயல்படுகிறது. மாறும் காந்தப்புலம் முதன்மைச் சுற்றில் வழங்கப்படுகிறது, இவை வெற்றிடமாக்கப்பட்ட வட்ட குழாயின் வழியே, இலத்திரன்கள் முடுக்கப்படுகின்றன.
நிலையான வட்டப்பாதையில் செயல்படும் இலத்திரன்கள், கீழ்காணும் சூத்திரத்தின் படி செயல்படுகிறது.
இதில்
அதே சூத்திரம் இவ்வாறும் எழுதப்படுகிறது.
பீட்டாட்ரான் என்பது இலத்திரன்களுக்கு வழங்கப்படும் பீட்டா துகள் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.[14] "Außerordentlichehochgeschwindigkeitselektronenentwickelndesschwerarbeitsbeigollitron" என்ற செர்மானியப் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் அதிவேக இலத்திரன்களை உருவாக்க கடினமாக இயங்கும் கருவி என்பதாகும்.[15][16][17]
துகள் இயற்பியலில் 300 MeV வரை ஆற்றல் கொண்ட இலத்திரன்களை முடுக்க பீட்டாட்ரான் பயன்படுகிறது. அதி வேக இலத்திரன் கற்றைைகள் உலோகத் தகட்டின் மீது மோதும் போது எக்சு-கதிர் மற்றும் காம்மா கதிர்களை உருவாக்கும் மூலமாகச் செயல்படுகிறது. இவ்வகை எக்சு கதிர்கள் மருத்துவம் மற்றும் தொழிற்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது (radiation oncology). அணுக்கரு ஆயுதங்களின் செயல்பாட்டைச் சோதிக்கப் பயன்படும் கடின எக்சு கதிர்களை உருவாக்கப் பயன்படுகிறது.[18][19][20]
1950 களில் பீட்டாட்ரான்களைக் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மேடிசன் என்ற இடத்தில் துவக்கப்பட்டது.[21]
பீட்டாட்ரானின் ஆற்றல், காந்தப்புலத்தின் ஆற்றலைக் கொண்டு செயல்படுவதால், இரும்பு உள்ளகம் கொண்ட பீட்டாட்ரான் ஒரளவுக்கு மேல் ஆற்றலை உருவாக்க இயலவில்லை. அடுத்து உருவாக்கப்பட் சின்குரோத்திரன் போன்ற கருவிகள், இந்தக் குறைபாட்டை சரி செய்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.