போக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) ஓர் இந்திய அரசியல்வாதியும், கருநாடகத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1].இவர் லிங்க பனாஜிகா சமூகத்தில் பிறந்தவர் [2][3][4]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் (7 நாட்கள்) முதலமைச்சராகப் பணியாற்றினார்.[5]

விரைவான உண்மைகள் பி. எஸ். யெதியூரப்பா, 25ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர் ...
பி. எஸ். யெதியூரப்பா
Thumb
பி. எஸ். யெதியூரப்பா
25ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
17 மே 2018  19 மே 2018
ஆளுநர்வாஜ்பாய் வாலா
முன்னையவர்சித்தராமையா
பின்னவர்எச். டி. குமாரசாமி
பதவியில்
மே 30, 2008  சூலை 31,2011
முன்னையவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
பின்னவர்டி. வி. சதானந்த கௌடா
தொகுதிஷிக்கரிப்பூர்
பதவியில்
நவம்பர் 12, 2007  நவம்பர் 19, 2007
முன்னையவர்எச். டி. குமாரசாமி
பின்னவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
தொகுதிஷிக்கரிப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பெப்ரவரி 1943 (1943-02-27) (அகவை 81)
போக்கனக்கெரெ, மாண்டியா மாவட்டம், கருநாடகம் இந்தியா இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்மைத்திரதேவி
பிள்ளைகள்இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்
வாழிடம்பெங்களூர்
As of மே 28, 2008
மூலம்:
மூடு

இவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.[6]

2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சி 10 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால் தனது கட்சியை பாரதீய ஜனதா கட்சியுடன் இணைத்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். 2016 ஆம் ஆண்டு கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2018 மே மாதத்தில் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி ஏற்ற 3 ஆம் நாளில் பதவியிலிருந்து விலகினார்.[7]

2019 ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வராக பதவியேற்பு

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததை அடுத்து 105 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் மாலை எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார்.[8]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.