பிரெட் அஸ்ரயர்
அமெரிக்க நடனக் கலைஞர், நடிகர் மற்றும் பாடகர் (1899-1987) / From Wikipedia, the free encyclopedia
பிரெட் அஸ்ரயர் (மே 10, 1899 – யூன் 22, 1987) ஓர் அமெரிக்க நடிகர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், பாடகர். அக்கடமி விருது பெற்ற இவரது நடிப்புக் காலம் 76 ஆண்டுகளாகும். 31 இசைத் திரைப்படங்களை உருவாக்கியவர். நடனக் கலைஞராகவும் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.இவர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தினால், அனைத்து காலங்களிலும் போற்றப்படும் ஆண் நட்சத்திர மனிதர்களில், ஐந்தாவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் ஜின்சர் ரோஜர்ஸின் நடன கூட்டாளியாக பெரிதும் அரியப்பட்டவர் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ச்சியாக பத்து இசை நடனங்கள் வெளியிட்டுள்ளனர்.
விரைவான உண்மைகள் பிரெட் அஸ்ரயர், இயற் பெயர் ...
பிரெட் அஸ்ரயர் | |
---|---|
1951 இல் | |
இயற் பெயர் | பிரடெரிக் அஸ்ரர்லிற்ஸ் |
பிறப்பு | (1899-05-10)மே 10, 1899 நெப்ரஸ்கா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூன் 22, 1987(1987-06-22) (அகவை 88) லொஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | நடிகர், நடனக் கலைஞர் |
நடிப்புக் காலம் | 1917-1981 |
மூடு