பியுட்டான் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பியுட்டான் மாவட்டம் (Pyuthan) (நேபாளி: प्युठान जिल्लाகேட்கⓘ), தெற்காசியாவின் நேபாள நாட்டின் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புயுட்டான் நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும். இந்நகரம், நேபாளத் தலைநகரான காட்மாண்டிலிருந்து மேற்கே இருநூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ரப்தி மண்டலத்தின் மலைப்பாங்கான மாவட்டமான பியுத்தான் மாவட்டம் 1,309 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,26,796 ஆகும். இம்மாவட்ட மக்கள் நேபாள மொழி, நேபாள் பாஷா, காம்குரா மொழிகள் பேசுகின்றனர்.