![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Pitas_Sabah_PekanPitas-01.jpg/640px-Pitas_Sabah_PekanPitas-01.jpg&w=640&q=50)
பித்தாசு
மலேசியாவில் சபா மாவட்டத்தின் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
பித்தாசு அல்லது பித்தாஸ் என்பது (மலாய்: Pekan Pitas; ஆங்கிலம்: Pitas Town) மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, பித்தாசு மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். 2010-ஆம் ஆன்டு மதிப்பீட்டின்படி இங்கு 37,808 பேர் வசிக்கின்றனர். இந்த நகரம் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப் படுவதும் உண்டு.[1][2][3]
விரைவான உண்மைகள் பித்தாசு நகரம், நாடு ...
பித்தாசு நகரம் | |
---|---|
சபா | |
![]() பித்தாசு நகரப் படம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | கூடாட் பிரிவு |
மாவட்டம் | பித்தாசு மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 37,808 |
மூடு
இங்கு ருங்குசு, ஓராங் சுங்காய் ஆகிய இனக் குழுமங்கள் முதன்மையாக உள்ளன. மேலும் தோம்போனுவோ (Tombonuo) வம்சாவளியைச் சேர்ந்தவர்களும்; குறைந்த எண்ணிக்கையிலான மலேசியச் சீனர்களும்; பிற இன சிறுபான்மையினரும் வாழ்கின்றனர்.
பித்தாசு நகரத்தின் புவியியல் தனிமை மற்றும் விவசாயத்திற்குப் பொருத்தமற்ற நிலங்களின் தன்மை காரணமாக, சபா மாநிலத்தில் அதிக வறுமை கொண்ட பகுதியாகக் கருதப் படுகிறது.