From Wikipedia, the free encyclopedia
பிஎஸ்ஓ ஜே318.5-22(PSO J318.5-22) என்பது ஒரு உறுதி செய்யப்பட்ட புறக்கோள் ஆகும்[2][3].இது எந்த விண்மீனையும் சுற்றி வரவில்லை.இந்தக் கோள் புவியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பீட்டா பிக்டோரிச் நகரும் குழுப் பகுதியில் அமைந்துள்ளது[4] , இது 2013ல் பான்-எச்டிஎஆர்ஆர் PS1 தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தக் கோள் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பீட்டா பிக்டோரிச் நகரும் குழுவும் இதே வயது உடையது ஆகும்[5].
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 6.5[1] MJ |
ஆரை | (r) | 1.53 RJ |
வெப்பநிலை | (T) | 1,160 ± 30–40 கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | ||
கண்டுபிடிப்பாளர்(கள்) | ||
கண்டுபிடித்த முறை | புகைப்பட முறை | |
கண்டுபிடித்த இடம் | பான்-எச்டிஎஆர்ஆர் PS1 தொலைநோக்கி, Haleakalā | |
கண்டுபிடிப்பு நிலை | வெளியிடப்பட்டுள்ளது. | |
வேறு பெயர்கள் | ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் டாக்டர்.மைக்கேல் லியூ கூறுகையில்,விண்வெளியில் இது போன்று விண்மீன்களின்றித் தனித்த கோள் எதையும் இதுவரை நாங்கள் கண்டதில்லை எனவும் இதன் பண்புகள் ஒரு புதிய கோளின் பண்புகளை போன்று அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இது போன்ற தனித்திருக்கும் நிலைமையை விளக்க தற்போதைய கோட்பாடுகளின் படி , இவை வலிமையான கோள்களினால் அதன் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கலாம் அல்லது இவை வேறு வழிகளில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.