குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
பாலோ (மலாய்: Paloh; ஆங்கிலம்: Paloh; சீனம்:巴罗); என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். குளுவாங் நகரில் இருந்து 35 கி.மீ.; யோங் பெங் (Yong Peng) நகரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
பாலோ | |
---|---|
Paloh | |
ஜொகூர் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°12′7″N 103°11′33″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | குளுவாங் |
அரசு | |
• வகை | மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் |
• நிர்வாகம் | குளுவாங் நகராட்சி மன்றம் (Kluang Municipal Council) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 14,320 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 86000 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
பாலோ ஒரு முக்கிம் பகுதியாகும். அந்த வகையில் 429 கி.மீ km2 பரப்பளவைக் கொண்டுள்ளது. பாலோ நகரத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள்; மூவினத்தவரும் ஒரு சீரான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.
2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 16,420. ஆண்கள்: 9083; பெண்கள்: 7337.[2]
மலாயா அவசரகாலகாலத்தில், இந்த நகரம், மலாயா தேசிய விடுதலை படையினருக்கு (Malayan National Liberation Army (MNLA) அனுதாபிகளைக் கொண்ட ஒரு "கருப்புப் பகுதி" என அறியப்படுகிறது.[3][4]
குளுவாங் நகராட்சி மன்றத்தில் உள்ள இடங்கள்:
இந்த நகரத்தில் கே.டி.எம். (KTM) மலாயா தொடருந்து நிறுவனத்தின் நகரிடை இயங்கும் ஊர்தி நிலையம் (KTM Intercity) உள்ளது. இந்த நிலையம் கோலாலம்பூர்; ஜொகூர் பாரு நகரங்களின் தொடருந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
ஜொகூர், குளுவாங் மாவட்டம், பாலோ நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 145 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.