பாறைத்தூண்
கற்களாலான தூண் போன்ற அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
பாறைத்தூண் (Stalagnate) என்பது சுண்ணாம்புக்கல் குகையின் கூரையிலிருந்து அக்குகையின் தரைப்பகுதி வரை உருவாகியுள்ள தூண் போன்ற வடிவத்திலான பாறையாகும். இப்பாறை, தூண் அல்லது கல்சேர் தூண் (sinter column) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. விழுதுப்பாறை மற்றும் புற்றுப்பாறை நீட்சிகள் சந்திப்பதால் அல்லது விழுதுப்பாறை வளர்ந்து தரைப்பகுதியை அடைவதால் பாறைத்தூண் உருவாகிறது. மேலும் விழுதுப்பாறை மற்றும் புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே பாறைத்தூண் [1] என்றும் கருதப்படுகிறது.