![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Barmer_in_Rajasthan_%2528India%2529.svg/langta-640px-Barmer_in_Rajasthan_%2528India%2529.svg.png&w=640&q=50)
பார்மேர் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பார்மேர் மாவட்டம் (Barmer District - बाडमेर जिला), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பார்மேர் ஆகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
மாநிலம் | இராஜஸ்தான், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | ஜோத்பூர் கோட்டம் |
தலைமையகம் | பார்மேர் |
பரப்பு | 28,387 km2 (10,960 sq mi) |
மக்கட்தொகை | 2,603,751 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 92/km2 (240/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 6.98% |
படிப்பறிவு | 56.53 |
பாலின விகிதம் | 902 |
வட்டங்கள் | 8 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 15 மற்றும் 112 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Barmer_in_Rajasthan_%28India%29.svg/640px-Barmer_in_Rajasthan_%28India%29.svg.png)
இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதியில் அமைந்த இம்மாவட்டம்[1] ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது.
நிலப்பரப்பில் பார்மர் மாவட்டம், இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றாவதும், இந்திய மாவட்டங்களில் ஐந்தாவது பெரிய மாவட்டமாகும்.[2]
இம்மாவட்டத்தில் அண்மையில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]