பார்மிக் நீரிலி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பார்மிக் நீரிலி, (Formic anhydride) C
2H
2O
3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது மெதனோயிக் நீரிலி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அமைப்பு வாய்ப்பாடு (H(C=O)−)2O ஆகும். இது பார்மிக் அமிலத்தின் (HCOOH) நீரிலி ஆகும். .
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பார்மிக் நீரிலி[1] | |
வேறு பெயர்கள்
மெதனோயிக் நீரிலி பார்மைல்ஆக்சிமெத்தனோன் | |
இனங்காட்டிகள் | |
1558-67-4 | |
Beilstein Reference |
1901016 |
ChEBI | CHEBI:36657 |
ChemSpider | 7827603 |
Gmelin Reference |
1041427 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9548680 |
| |
பண்புகள் | |
C2H2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 74.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
கொதிநிலை | 24 °C (75 °F; 297 K) at 20 மிமீபாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பார்மைல் புளோரைடுடன் ஈதரில் உள்ள சோடியம் பார்மேட்டை −78 °செ வெப்பநிலையில் வினைப்படுத்துவதன் மூலம் பார்மிக் நீரிலியானது தயாரிக்கப்படுகிறது.[2] இது பார்மிக் அமிலத்தை ஈதரில் உள்ள N,N'-டைசைக்ளோஎக்சைல்கார்போடையிமைடுடன் ((C
6H
11−N=)2C) −10 ° செ வெப்பநிலையில் வினைப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது,[3] இது அசிட்டிக் பார்மிக் நீரிலியின் சரியான விகிதமற்ற சிதைவின் மூலமாகவும் பெறப்படுகிறது.[4]
பார்மிக் நீரிலியானது 20 மிமீ பாதரச அழுத்தத்தில் 24 °செ கொதிநிலை உடைய நீர்மமாகும்.[3] இச்சேர்மமானது, டை எதில் ஈதர் கரைசலில் நிலைத்தன்மை உடையது. இது குறைவான வெப்பநிலை மற்றும் அழுத்தநிலையில் வாலை வடித்தல் மூலமாக பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், அறை வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலையில் இது சிதைவுறுகிறது.[3] இது பார்மிக் அமிலம் மற்றும் கார்பன் மோனாக்சைடாக சிதைவுறுகிறது.[5]
பார்மிக் நீரிலியின் சிதைவு வினையில் பார்மிக் அமிலமானது வினைவேகமாற்றியாக செயல்படுகிறது.[3]
வாயு நிலையில் உள்ள ஓசோனுடனான எத்திலீனின் வினையில் பார்மிக் நீரிலியானது கண்டறியப்படலாம்.[6] இந்த பார்மிக் நீரிலி மூலக்கூறானது வாயு நிலையில் சமதள அமைப்பைப் பெற்றுள்ளது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.