![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/20230425_Park_Hyung-sik_%25EB%25B0%2595%25ED%2598%2595%25EC%258B%259D.jpg/640px-20230425_Park_Hyung-sik_%25EB%25B0%2595%25ED%2598%2595%25EC%258B%259D.jpg&w=640&q=50)
பார்க் கியுங் சிக்
From Wikipedia, the free encyclopedia
பார்க் ஹ்யுங்-சிக் (ஆங்கில மொழி: Park Hyung-sik, 박형식) (பிறப்பு: நவம்பர் 16, 1991) என்பவர் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, 2010 இல் தென் கொரிய சிறுவர் பாடகர் குழு சே:ஏ (ZE:A) இன் உறுப்பினராக அறிமுகமானார்.
விரைவான உண்மைகள் பார்க் ஹ்யுங்-சிக், பிறப்பு ...
பார்க் ஹ்யுங்-சிக் | |
---|---|
![]() | |
பிறப்பு | நவம்பர் 16, 1991 (1991-11-16) (அகவை 32) யோன்கின் தென் கொரியா |
பணி | பாடகர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 (2010)–இன்று வரை |
வலைத்தளம் | |
http://www.ze-a.com |
மூடு
ஒரு நடிகராக, இவர் தி ஹெர்ஸ் (2013), ஹை சொசைட்டி (2015), ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத் (2016), ஸ்ட்ராங் கேர்ள் பாங்-சூன் (2017), சூட்ஸ் (2018), ஹேப்பினஸ் (2021) ஆகிய தொடர்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். அத்துடன் இவர் திரைப்படங்கள் மற்றும் இசை நாடக தயாரிப்புகளிலும் நடித்துள்ளார்.