பாரன் தீவு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பாரன் தீவு (Barren Island) என்பது இந்தியாவின், அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் கடலில் உள்ளது. இது அந்தமான் தீவுச் சங்கிளியின் கிழக்கில் தொலைவில் உள்ள ஒரு தீவாகும். இங்குதான் தெற்காசியாவிலேயே விழித்திருக்கும் ஒரே எரிமலை உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆட்சிப்பகுதியின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து வடகிழக்காக 135 km (84 mi) தொலைவில் உள்ளது. இதில் உள்ள எரிமலை வெடிப்பு குறித்து முதல் பதிவு கி.பி. 1787 முதல் உள்ளது, அப்போதுமுதல் பத்துமுறைக்கு மேல் எரிமலை வெடித்துள்ளது. மிக அண்மையில் செப்டம்பர் 2010 மற்றும் சனவரி 2011 இல் வெடித்துள்ளது.[1]
பாரன் தீவு Barren Island | |
---|---|
1995 இல் எரிமலை வெடிப்பு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 354 m (1,161 அடி) |
ஆள்கூறு | 12°16′40″N 93°51′30″E |
புவியியல் | |
அமைவிடம் | அந்தமான் தீவு, இந்தியா |
நிலவியல் | |
மலையின் வகை | Stratovolcano with pyroclastic cones |
கடைசி வெடிப்பு | 2013 to 2015 (ongoing) |
முதல் பதிவான 1787 க்கு பிறகு 1789, 1795, 1803–04, 1852 ஆகிய ஆண்டுகளில் வெடித்து, பின் அதற்குப்பிறகு ஏறக்குறைய ஒன்னரை நூற்றாண்டுகளாக தீவில் செயலற்று தூங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை 1991 ஆண்டு வெடித்து ஆறு மாதங்கள் குமுறியபடி இருந்தது. பிறகு 1994–95 மற்றும் 2005–07 காலகட்டத்தில் வெடித்தது. பிறகு 2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்போது இதன் பங்கு இருந்த்தாக கருதப்படுகிறது.[2]
இந்த எரிமலைத் தீவு இந்திய பரிமிய நிலத்தட்டுகளின் விளிம்பின் மையத்தில் உள்ளது.
இத்தீவில் மனிதர்கள் யாரும் இல்லை.சிறிய எண்ணிக்கையிலான ஆடுகள், பறவைகள், பழ வௌவால்கள் போன்ற வௌவால்கள், எளி போன்ற கொறிணிகள் காணப்படுகின்றன.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.