பாஞ்சதர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பாஞ்சதர் மாவட்டம் (Panchthar district) (நேபாளி: पाँचथर जिल्लाListenⓘ) கிழக்கு நேபாள நாட்டின், மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்கு பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டம் ஆகும். இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிடம் பிடிம் எனும் நகரம் ஆகும்.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சதர் மாவட்டம் 1,241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1,91,817 கொண்டுள்ளது.
பாஞ்சதர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக லிம்பு , கிராதர்கள் மற்றும் பிற பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர்.