![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Pausanias_in_the_Capitoline_Museums%252C_Rome.jpg/640px-Pausanias_in_the_Capitoline_Museums%252C_Rome.jpg&w=640&q=50)
பாசேனியஸ், அரசப் பிரதிநிதி
பண்டைய எசுபார்தாவின் தளபதி / From Wikipedia, the free encyclopedia
பாசேனியஸ் (Pausanias ( கிரேக்கம்: Παυσανίας ; இறப்பு c. கிமு 477) [1] என்பவர் ஒரு எசுபார்த்தன் அரசப் பிரதிநிதி மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 479 இல், கிரேக்க நகர அரசுகளின் கூட்டணியின் ஒருங்கிணைந்த தரைப் படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது இவரது தலைமையிலான படைகள், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பிளாட்டீயா போரில் முக்கிய வெற்றியைப் பெற்றன. பாரசீகர்கள் மற்றும் பாரசீக கூட்டாளிகள் மீதான வெற்றிகளுக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, பௌசானியாஸ் பாரசீக மன்னரான செர்கசுக்கு கிரேக்கர்களைக் காட்டிக்கொடுக்க சதி செய்ததாக சந்தேகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கிமு 477 இல் எசுபார்த்தாவில் சக குடிமக்களால் தண்டிக்கப்பட்டு உணவு வழங்ககப்படாமல் பட்டினியால் இறந்தார். துசிடிடீசின் பெலோபொன்னேசியப் போரின் வரலாறு, டியோடரஸின் பிப்லியோதெகா ஹிஸ்டோரிகா மற்றும் சில பாரம்பரிய ஆதாரங்களின் படி இவரது வாழ்க்கை அறியப்படுகிறது.
பாசேனியஸ் | |
---|---|
![]() உரோமில் உள்ள கேபிடோலின் அருங்காட்சியகங்களில் உள்ள பாசேனியஸ்சின் மார்பளவு சிலை. | |
எசுபார்த்தாவின் அரச பிரதிநிதி | |
ஆட்சிக்காலம் | கிமு 479–478 |
முன்னையவர் | Cleombrotus |
பின்னையவர் | Pleistarchus |
இறப்பு | கி.மு. 477 எசுபார்த்தா |
குழந்தைகளின் பெயர்கள் |
|
Greek | Παυσανίας |
மரபு | அகியட் வம்சம் |
தந்தை | Cleombrotus |
தாய் | தியானோ |