பாசிர் மாஸ் மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாசிர் மாஸ் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Pasir Mas; கிளாந்தான் மலாய் மொழி: Mache; ஆங்கிலம்: Pasir Mas District; சீனம்: 巴西马县; ஜாவி: ڤاسير مس) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[3]
விரைவான உண்மைகள் பாசிர் மாஸ் மாவட்டம் Pasir Mas DistrictJajahan Pasir Mas, நாடு ...
பாசிர் மாஸ் மாவட்டம் Pasir Mas District Jajahan Pasir Mas | |
---|---|
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 6°2′N 102°8′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | பாசிர் மாஸ் |
நகரம் | பாசீர் மாஸ் |
உள்ளாட்சி | பாசீர் மாஸ் உள்ளாட்சி மன்றம்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 570 km2 (220 sq mi) |
மக்கள்தொகை (2022) | |
• மொத்தம் | 2,33,400 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 17xxx |
தொலைபேசி எண்கள் | +6-09 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
மூடு
இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.