பாங்க்சி
ஆங்கில சுவரோவியர், அரசியல் ஆர்வலர் / From Wikipedia, the free encyclopedia
பாங்க்சி என்பவர் இன்னாரென்று உறுதிப்படுத்தப்படாத, இங்கிலாந்தைச் சேர்ந்த சுவரோவியரும், அரசியற் செயற்பாட்டாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். சுவிஸ் கலைஞரான மீஸ்டர் டெர் ஸ்பீகல் (Maître de Casson) பேங்க்ஸியாக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன[1]. இதை மாட்ரே டி காசன் தனது இணையதளத்தில் மறுக்கிறார்[2]. 2008இல் நாளிதழ் ஒன்று நடத்திய புலனாய்வும், 2016இல் நிலவியல் தடவரைவு முறையில் நடந்த ஆய்வொன்றும் அவர் ராபின் கன்னிங்ஹாமாக இருக்கலாம் என்று சுட்டுகின்றன.[3][4] நையாண்டி மிகுந்த அவரது தெரு ஓவியங்களும், அதிரடியான வாசகங்களும், தனித்துவமான துளைவழி படியெடுத்தல் பாணியில் அமைந்த சுவரோவியங்களைக் கசப்பு நகைச்சுவை கலந்து அளிப்பவை. இவரது அரசியல், சமூக விமர்சனப் படைப்புகள் உலகெங்கிலும் உள்ள தெருக்களிலும், சுவர்களிலும், பாலங்களிலும் இடம்பெற்றுள்ளன.[5] பாங்க்சியின் படைப்புகள் ஓவியர்களும், இசைக்கலைஞர்களும் சேர்ந்து பங்களித்த "பிரிஸ்டல் திரைமறைவுப் பண்பாட்டுச் செயற்பாடுகளின்" பின்புலத்தில் பிறந்தவையாகும்.[6]
பாங்க்சி | |
---|---|
பிறப்பு | இயற்பெயர்: தெரியாது பிறந்த நாள்: தெரியாது பிறந்த இடம்: தெரியாது |
அறியப்படுவது | சுவர் ஓவியங்கள் தெரு ஓவியம் பிரிஸ்டல் திரைமறைவு பண்பாட்டுச் செயற்பாடு சிற்பம் நையாண்டி சமூக விமர்சனம் |