![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Bagan_Datuk_1.jpg/640px-Bagan_Datuk_1.jpg&w=640&q=50)
பாகன் டத்தோ
From Wikipedia, the free encyclopedia
பாகன் டத்தோ (Bagan Datoh அல்லது Bagan Datuk) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் பாகன் டத்தோ மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரமாகும். தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. மேற்காக உள்ளது.
விரைவான உண்மைகள் பாகன் டத்தோBagan Datoh பேராக், நாடு ...
![]() பாகன் டத்தோவில் வண்ணமயமான கடைவீடுகள் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°59′N 100°47′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பாகன் டத்தோ |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 13,189 (மக்கள் கணக்கெடுப்பு 2,010) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 36100 |
தொலைபேசி எண் | +6-05 |
இணையதளம் | பாகான் டத்தோ இணையப் பக்கம் |
மூடு
பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காண முடியும். அதனால் இந்த பாகன் டத்தோ பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்றும் அழைப்பது உண்டு.[2]