![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Kehijauan_sawah_padi..jpg/640px-Kehijauan_sawah_padi..jpg&w=640&q=50)
பாகன் செராய்
பாகன் செராய் (Bagan Serai) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாகன் செராய் (Bagan Serai) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது. இதற்கு கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) என்றும் பெயர். மலேசியாவில் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பாகன் செராய் Bagan Serai பேராக், நாடு ...
![]() பாகன் செராய் நெல் வயல்கள் | |
அடைபெயர்(கள்): குட்டி நகரம் (Kota Kecil) | |
![]() | |
ஆள்கூறுகள்: 5.018889°N 100.531944°E / 5.018889; 100.531944 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிரியான் |
உருவாக்கம் | 1840 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdkerian.gov.my/en |
மூடு
மலாய் மொழியில் “பாகன்” எனும் சொல்லுக்குப் படகுகள் அணையும் இடம் அல்லது சில வணிக நடவடிக்கைகளுக்குத் தரையிறங்கும் இடம் என்று பொருள். “செராய்” என்றால் எலுமிச்சை புல். மலாய் மக்கள் உணவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது இங்கு பெரும் அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.[2]