பர்ஸில் கணவாய்
From Wikipedia, the free encyclopedia
பர்ஸில் கணவாய் (Burzil Pass) (உயரம்: 4,100 மீ (13,500 அடி) )[3] என்பது வடக்கு பாக்கித்தானில் உள்ள ஒரு பழங்கால கணவாய் ஆகும். இது சிறிநகர் மற்றும் கில்கித்-பல்திஸ்தான் இடையேயான வரலாற்று கேரவன் பாதையின் ஒரு பகுதியாகும்.வடக்கு நிலங்கள், ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான நிர்வாகக் கோட்டிலிருந்து சுமார் 5 கி.மீ வடக்கே இந்தக் கணவாய் அமைந்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வடக்கே சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இது காஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் நடைமுறைப்படி எல்லையாக செயல்படுகிறது. இப்பகுதி இப்போது காஷ்மீர் மோதல் பிரதேசமாகவும், பிரிக்கப்பட்டதாகவும் இருப்பதால், பர்ஸில் பாதையின் சில முக்கிய பிரிவுகளை ( ஜம்மு காஷ்மீர் இராச்சியம்) பாக்கித்தான் மூடியுள்ளது. இந்த கணவாய்,கோடைகாலத்தில் பசுமையான ஆல்பைன் புல் தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. ஆஸ்டர் ஆறு கணவாயின் மேற்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது. [4]
பர்ஸில் கணவாய் | |
---|---|
பாக்கித்தான் நிர்வாக காஷ்மீரில் பர்ஸில் கண்வாய் வழியாக செல்லும் பாதையின் ஒரு பகுதி | |
ஏற்றம் | 4,100 மீ (13,451 அடி)[1] |
அமைவிடம் | கில்கித்-பல்திஸ்தான், பாக்கித்தான் |
மலைத் தொடர் | இமயமலை |
ஆள்கூறுகள் | 34°54′00″N 75°06′00″E[2] |
வடக்கு நிலங்களில் கண்வாயின் அமைவிடம் |