பரானா (Paraná போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [paɾaˈna]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் வடக்கே சாவோ பாவுலோ மாநிலமும், கிழக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தெற்கில் சான்டா கதரீனா மாநிலமும், அர்கெந்தீனா நாடும், மேற்கே மடோ குரோசோ டொ சுல் மாநிலமும் பரகுவைக் குடியரசும் அமைந்துள்ளன; பரனா ஆறு மேற்கு எல்லையை வரையறுக்கிறது. மகர ரேகை குறுக்கேச் செல்லும் பரானாவில் உலகின் சிறப்புமிக்க வெப்பமண்டலம் அணவிய ஊசியிலைக் காடுகள் உள்ளன. அர்கெந்தீனாவின் எல்லையிலுள்ள இக்ககுவசு தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இங்குள்ள கதரசாசு டோ இக்குவசுவைக் காண ஆண்டுதோறும் 700,000 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பரகுவையின் எல்லையில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டு, இட்டைப்பூ நீர் மின் நிலைய அணை, கட்டப்பட்டுள்ளது. போன்டா குரோசா நகருக்கு அருகிலுள்ள விலா வெல்கா அரசுப் பூங்காவில் மழையாலும் காற்றாலும் அரிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ள இயற்கையான பாறை வடிவங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. தலைநகர் குரிடிபேயின் வாழ்நிலைத் தரம் பிரேசிலின் சராசரியை விட உயர்ந்ததாக உள்ளது.

விரைவான உண்மைகள் பரானா மாநிலம், நாடு ...
பரானா மாநிலம்
Thumb
கொடி
Thumb
சின்னம்
Thumb
பிரேசிலில் பரானா மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரும் பெரிய நகரமும்குரிடிபே
அரசு
  ஆளுநர்பெட்டோ ரிச்சா
  உதவி ஆளுநர்பிளாவியோ ஆர்னசு
பரப்பளவு
  மொத்தம்1,99,314.9 km2 (76,955.9 sq mi)
  பரப்பளவு தரவரிசை15வது
மக்கள்தொகை
 (2007)[1]
  மொத்தம்1,02,79,545
  தரவரிசை6th
  அடர்த்தி52/km2 (130/sq mi)
இனம்Paranaense
GDP
  Year2006 estimate
  TotalR$ 136,681,000,000 (5th)
  Per capitaR$ 13,158 (7th)
HDI
  Year2011
  பகுப்பு0.823 high (7th)
நேர வலயம்ஒசநே-3 (BRT)
  கோடை (பசேநே)ஒசநே-2 (BRST)
அஞ்சல் குறியீடு
80000-000 to 86990-000
ஐஎசுஓ 3166 குறியீடுBR-PR
இணையதளம்pr.gov.br
மூடு

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.