![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/Pleurotus_ostreatus_JPG7.jpg/640px-Pleurotus_ostreatus_JPG7.jpg&w=640&q=50)
பரல் கிளிஞ்சல் காளான்
From Wikipedia, the free encyclopedia
பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு (Pleurotus ostreatus), எனும் பரல் கிளிஞ்சல் காளான் (pearl oyster mushroom) அல்லது மரக் கிளிஞ்சல் காளான் (tree oyster mushroom) என்பது பொதுவாக உண்ணத்தக்க காளான் ஆகும்மிது முதல் உலகப் போரில் செருமனியில் உயிர்த்தரிப்பு உணவாகப் பயிரிடப்பட்டது.[2] இன்று இது உணவுக்காக உலகம் முழுவதும் வணிகமுறையில் பயிரிடப்படுகிறது. இது இதைப் போலவே பயிரிடப்படும் பிளியூரோத்தசு எறிஞ்சி (Pleurotus eryngi) அல்லது அரசக் கிளிஞ்சல் காளானுடன் உறவுடையது. இந்தக் கிளிஞ்சல் காளான் பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு தொழில்முறையில் பூஞ்சைவழிக்காப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பரல் கிளிஞ்சல் காளான் | |
---|---|
![]() | |
பரல் கிளிஞ்சல் காளாண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | பேசிடியோமைக்கோட்டா |
வகுப்பு: | அகாரிகோமைசீட்சு |
வரிசை: | அகாரிக்கேல்சு |
குடும்பம்: | முத்துச்சிப்பி காளான் குடும்பம் (Pleurotaceae) |
பேரினம்: | பிளியூரோத்தசு |
இனம்: | பி. ஆசுட்டிரீட்டசு |
இருசொற் பெயரீடு | |
பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு (Jacq. ex Fr.) P.Kumm. (1871)[1] | |
பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு Mycological characteristics | |
---|---|
![]() | Gills on hymenium |
![]() | Cap is offset |
![]() | Hymenium is decurrent |
![]() | Stipe is bare |
![]() | Spore print is white |
![]() | Ecology is saprotrophic |
![]() | Edibility is choice |
கிளிஞ்சல் காளான்கள் பொதுவாக மிகவும் விரும்பி உண்ணப்படும் காட்டுவகைக் காளானாகும். என்றாலும் இவற்றை வைக்கோல் மீதும் பிற ஊடக மீதும் கூட பயிரிடலாம். இது பெஞ்சால்டிகைடு இனிப்பின் நறுமணம் செறிந்தது ( இது வாதுமைப் பான்மைகளையும் செறிவாகப் பெற்றுள்ளது).[3]