From Wikipedia, the free encyclopedia
|
வாருங்கள், Maathavan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
மேலும் காண்க:
--Kanags \உரையாடுக 06:28, 13 ஏப்ரல் 2013 (UTC)
--aathavan jaffna (பேச்சு) 15:40, 13 ஏப்ரல் 2013 (UTC)வணக்கம் மாதவன், யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் ஒரு மாணவனை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பவளப்பாறைகள் உருவாகும் விதம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய குறிப்பு ஏற்கனவே பவளப் பாறைகள் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் அதனை நீக்கியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 08:29, 15 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Maathavan/Archive1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
வணக்கம், Maathavan/Archive1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், Maathavan/Archive1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
நீங்கள் பங்களித்த பழம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல், கலைக்களஞ்சியக் கட்டுரை அற்ற உள்ளடங்கங்களைக் கொண்டதால் நீக்கப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 03:33, 13 ஆகத்து 2013 (UTC)
தப்பான வழியில் செல்வதை தவிர்த்துக்கொள்கிறேன்.--மாதவன்(பேச்சு) 12:56, 23 ஆகத்து 2013 (UTC)
மாதவன், நீங்கள் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு பரிசு வெல்ல வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 17:16, 23 ஆகத்து 2013 (UTC) நன்றி --மாதவன் (பேச்சு) 02:03, 24 ஆகத்து 2013 (UTC)
தமிழ்நாட்டில் வெளியாகும் இதழ் ஒன்றில் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு குறித்த செய்தி வெளியிடுவதற்காக தங்கள் புகைப்படத்தை (மார்பளவு புகைப்படம்) msmuthukamalam@gmail.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:58, 3 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைகளில் தேவையற்ற விதத்திலும் அளவுக்கு அதிகமாகவும் உள்ளிணைப்புக்களை உருவாக்க வேண்டாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:22, 27 திசம்பர் 2013 (UTC)
சரி--மாதவன் (பேச்சு) 03:25, 27 திசம்பர் 2013 (UTC)
பார்க்க: வலைவாசல்:சைவம்.--Kanags \உரையாடுக 05:33, 28 திசம்பர் 2013 (UTC)
நண்பா! தாங்கள் வடிவமைத்த வலைவாசல் மிக மிக நன்றாய் உள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்துள்ளேன், ஏதும் பிழை இருந்தால் கூறுங்கள் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் கேளுங்கள். --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:00, 1 சனவரி 2014 (UTC)
மாதவா! நாமெல்லாம் ஒரே country நமக்குள்ளை எதுக்குப்பா நன்றி... --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:20, 2 சனவரி 2014 (UTC)
அது பரவாயில்லை விடுப்பா --மாதவன் User talk:Maathavan (என்னுடன் உரையாட படத்தை சொடுக்கவும்) 11:49, 2 சனவரி 2014 (UTC)
அடப் போங்கப்பா --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:11, 2 சனவரி 2014 (UTC)
நன்றி!விக்கித்திட்டம் வானியலில் இணைந்து கொண்டதிற்கு நன்றி, இப்படியே உங்கள் உழைப்பு விக்கித்திட்டம் வானியலிற்காக மேலும் மேலும் தொடர வேண்டும்.--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:13, 3 சனவரி 2014 (UTC)
வணக்கம், Maathavan/Archive1!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--Anton·٠•●♥Talk♥●•٠· 14:42, 3 சனவரி 2014 (UTC)
விருப்பம்--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:00, 4 சனவரி 2014 (UTC)
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
வலைவாசல் சென்னை உருவக்கியதோடு மட்டுமன்றி 250 தொகுப்பு மைல்கல்லையும் அடைந்து விட்டீர்கள் இப்படிப் பல்வேறு பணிகளை செய்யும் உங்களுக்கு இப் பதக்கம் --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:19, 4 சனவரி 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி நண்பா!--மாதவன் User talk:Maathavan (என்னுடன் உரையாட படத்தை சொடுக்கவும்) 04:29, 5 சனவரி 2014 (UTC)
நீங்கள் இசை என்ற கட்டுரையின் கீழ் உள்ளடக்கியவை கர்நாடக இசையின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:48, 13 சனவரி 2014 (UTC)
மாதவா தாங்கள் இசை,ஊர்வன, பாலூட்டி, கணனியியல் போன்ற கட்டுரைகளில் சில பகுதிகளை வேறு சில கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டியுள்ளீர்கள் இவை கட்டுரை போட்டியில் சேர்க்கப்படுமா என சந்தேகமாக உள்ளது ஏனெனில் சென்றமாதம் எனது அண்ணணும் போதைப்பொருள் போன்ற ஓரிரண்டு கட்டுரைகளை சில கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டினார். எனினும் அக்கட்டுரைகள் கட்டுரைப் போட்டியில் சேர்க்கப்படவில்லை சந்தேகமிருந்தால் வேறு யாரிடமும் கேட்டுப்பாருங்கள். உங்கள் அண்ணனிடமும் ஆலோசனை கேட்கலாம், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:30, 15 சனவரி 2014 (UTC)
வலைவாசல் கொழும்பினை உருவாக்கி மேம்படுத்துவதற்கு எனது நன்றியும், பாராட்டுகளும். வலைவாசல் நிறத்தேர்வு சிறப்பாக இருக்கின்றது. இன்னும் சிறப்புக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:48, 21 சனவரி 2014 (UTC)
நன்றி ஜெகதீஸ்வரன் -- மாதவன் (பேச்சு) 16:11, 21 சனவரி 2014 (UTC)
வாழ்த்துக்கள்! மாதவா --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:35, 22 சனவரி 2014 (UTC)
இம்மாத கட்டுரைப் போட்டியில் நீங்கள் ஏற்கெனவே உள்ள கட்டுரைகளின் உள்ளடக்கங்களை பிரதி செய்துள்ளீர்கள். இதனால் நீங்கள் விரிவாக்கிய கட்டுரை போட்டிக்கு தகுதியற்றதாகிவிடலாம். எனவே பிரதி செய்யப்பட்டுள்ள பகுதிகளை நீக்கி உங்கள் முயற்சியினால் உள்ளடக்கங்களை சேர்த்து போட்டியில் பங்கு கொள்ளுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:13, 24 சனவரி 2014 (UTC)
அன்ரன் அவர்களே!... பிரதி செய்யப்பட்டுள்ள பகுதிகளை வேறு யாராவது நீக்கிவிட்டு அவரே வேறு உள்ளடக்கங்களை சேர்க்க முடியாதா? அது கட்டுரைப்போட்டியில் சேர்க்கப்படுமா?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:48, 24 சனவரி 2014 (UTC)
கருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:30, 9 பெப்ரவரி 2014 (UTC)
--..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..03:43, 14 பெப்ரவரி 2014 (UTC)
நண்பா! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...--aho;- பேச்சு 06:09, 14 பெப்ரவரி 2014 (UTC)
விக்கிப்பீடியா பயனர் பக்கம் கலைக்களஞ்சியத்தை வளர்ப்பதற்கேயன்றி. தனிப்பட்ட உரையாடல்களுக்கு அல்ல. தயவு செய்து தவிர்க்க வேண்டியவற்றையும் அரட்டைகளையும் தவிர்த்து ஆக்கபூர்வமாக உரையாடுங்கள். பலரும் பக்கங்களைக் கண்கானித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு அரட்டை விரும்பத்தக்கதல்ல. புரிதலுக்கு நன்றி!. --AntonTalk 07:43, 2 மார்ச் 2014 (UTC)
சிறப்புப் பதக்கம் | ||
தம்பி உனது விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். என்னை சென்ற மாத கட்டுரைப்போட்டிக்கு வரவழைத்ததற்கு நன்றிகள். :) ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:24, 6 மார்ச் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
கையெழுத்து எப்படி அமைய வேண்டும் என்பதற்கேற்ப படங்கள் தவிர்த்து அமையுங்கள். --AntonTalk 03:44, 25 மார்ச் 2014 (UTC)
மாதவன், மாதக் கட்டுரை ஒன்றில் அந்தந்த மாதத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் எழுத வேண்டாம். அவை ஏற்கனவே அந்தந்த ஆண்டுக்குரிய கட்டுரைகளில் உள்ளன. ஒரே தரவைப் பல கட்டுரைகளில் சேர்ப்பது அழகல்ல. அந்த மாதத்தில் நிகழ்ந்த மிக மிக முக்கிய நிகழ்வுகள் ஒன்றிரண்டை மட்டும் (ஆண்டொன்றுக்கு) சேர்த்தால் போதும். ஆங்கில விக்கிக் கட்டுரைகளைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:56, 31 மார்ச் 2014 (UTC)
தொடர் பங்களிப்புக்கு நன்றி
வணக்கம், Maathavan/Archive1!
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.
கட்டுரைகளில் பொருத்தமற்ற அட்டவனைகளையும், ஆங்கில உள்ளடக்கங்களையும், அதிகளவான படங்களையும் சேர்க்காதீர்கள். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதையும் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள். நன்றி. --AntonTalk 02:55, 1 ஏப்ரல் 2014 (UTC)
தலைநகரம் கட்டுரையில் எத்தனை ஆங்கிலம் பைட்டுகள் எத்தனை தமிழ் பைட்டுகள் என கண்டறிய முடியவில்லை. என்ன செய்யலாம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:46, 1 ஏப்ரல் 2014 (UTC)
வணக்கம்! பூலான் தேவி கட்டுரையில் வாழும் நபர்கள் எனும் பகுப்பினை சேர்த்துள்ளீர்கள். ஆனால் அவர் 2001இல் காலமாகிவிட்டார். கட்டுரையில் உரிய திருத்தத்தை செய்துள்ளேன். பகுப்பு சேர்த்தலை கவனமாக செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:47, 5 மே 2014 (UTC)
அன்புச் சகோதரர் திரு. மாதவன் அவர்கட்கு , இரயில் என்பதும் புலம் பெயர்க்கப்பட்ட தமிழ் சொல் தானே ! ரயில் என்ற சொல்லிற்கு முன்னால் "இ" சேர்த்து தமிழ் நெறிப்படி தானே தலைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் தொடருந்து என்பது , தொடராக செல்லும் எந்த ஒரு வாகனத்தையும் குறிக்கும் அல்லவோ! எது எப்படியாயினும் அரசாங்க முத்திரைகள் மற்றும் பலகைகள் "' இரயில் நிலையம்"' என்று தான் கூறுகின்றன !
மேலும் "' திருவண்ணாமலை நகரம் என்பதை திருவண்ணாமலை நகர என்று மாற்றி உள்ளீர்கள் ! தாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் திருவண்ணாமலை நகரம்"' என்பது ரயில் நிலையத்தின் பெயர் ஆகும் .. அதை நம்மால் மாற்ற இயலாது ! தலைப்பை மாற்றும் முன் உரையாடலில் கருத்து கேட்கவும் ! கட்டுரை எழுதுபவர் அதை அறிந்தே எழுதுவார் என்பதை நினைவிற் கொள்க ! ரோஹித் (பேச்சு)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.