From Wikipedia, the free encyclopedia
வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வணக்கம். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியை எளிதாக்குவதற்காக துணைப் பகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதம், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியல், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியலாளர்கள் ஆகியனவும் அடங்கும். இந்தக் கட்டுரைகளில் தங்களின் பங்களிப்பினை வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 2 சனவரி 2023 (UTC)
'பதிவு செய்தல்' பகுதியில் உங்களின் பதிவில் திருத்தம் செய்துள்ளேன். எனது புரிதல் சரியென நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 2 சனவரி 2023 (UTC)
வணக்கம். ஈருறுப்புப் பரவல் கட்டுரையை நிறைவு செய்தமைக்கு நன்றி. செம்மைப்படுத்துதல் முடிந்ததால், {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வார்ப்புருவினை இடுவதன் மூலமாக, செம்மைப்படுத்தியது யார் என்ற விவரம் பதிவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 7 சனவரி 2023 (UTC)
மிக்க நன்றி. இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:30, 7 சனவரி 2023 (UTC)
வணக்கம். இந்தக் கட்டுரையைப் படித்தால், ஒன்றுமே புரியவில்லை. உங்களின் கருத்தினை பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தானியங்கித் தமிழாக்கமாக இருந்தால், நீக்கலாம் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 15 சனவரி 2023 (UTC)
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 19 சனவரி 2023 (UTC)
வகை நுண்கணிதம் கட்டுரையை செம்மைப்படுத்தியமைக்கு நன்றிகள்.
வணக்கம். செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் அறிவித்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 28 சனவரி 2023 (UTC) @Selvasivagurunathan m:
வணக்கம். இந்தப் பக்கத்தில் காணப்படும் பெரும்பாலான கணிதக் கட்டுரைகள் தானியங்கித் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்டவை போன்று தெரிகின்றன. அவற்றை குறைந்தபட்சம் குறுங்கட்டுரைகளாக மாற்ற இயலுமா? புதிதாக எழுதுவது எளிது எனக் கருதினால் நீக்குவதற்கு பரிந்துரை செய்யலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இவற்றை கவனித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 26 சனவரி 2023 (UTC)
வணக்கம். வளர்த்தெடுக்க இயன்றவற்றை வளர்த்து, மற்றக் கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைத்ததை அறிந்துகொண்டேன். தங்களின் பேருதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 4 பெப்ரவரி 2023 (UTC)
@Selvasivagurunathan m: உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் முன்னெடுக்கும் கிடப்பில் கிடக்கும் கட்டுரைகளின் துப்புரவு பணிகளில் நானும் சிறிதளவு பங்களிக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் தரமற்றக் கட்டுரைகள் களையப்படவேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்படும் உங்கள் முயற்சி நிறைவுபெற வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 04:58, 5 பெப்ரவரி 2023 (UTC)
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது, தமிழ் விக்கியின் பலமாகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சிறிய குழுவே தீவிரமாக இயங்கினாலும், சிறப்பான முறையில் பங்களிப்பினைத் தருவது நமது கூடுதல் பலம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:05, 5 பெப்ரவரி 2023 (UTC)
வணக்கம். உங்களின் உதவிக்கு நன்றி. ஆனால், ஜான்சி கட்டுரையானது இந்த நிகழ்வின்போது கணக்கில் வந்துவிட்டது. அப்போது, சத்திரத்தான் அவர்கள் பகுப்பை நீக்கவில்லை; பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடவில்லை. இதனை நேற்று அவருக்கு சுட்டிக்காட்டிய பிறகு, தேவைப்படும் தொகுப்புகளைச் செய்தார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 9 மார்ச் 2023 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
வணக்கம். அழைப்பினை ஏற்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பகுதியில் தங்களின் பெயரை பதிவுசெய்து உதவுமாறு வேண்டுகிறோம். மற்றவர்களுக்கு இதுவொரு ஊக்கமாக அமையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 மே 2023 (UTC)
வணக்கம். பத்மா ஆறு எனும் கட்டுரையை பத்மா நதி கட்டுரையோடு ஒன்றிணைத்திருக்கவேண்டும் எனக் கருதுகிறேன். ஏனெனில் பத்மா ஆறு கட்டுரையில் தகவற்சட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. புவியியல் வரைபடமும் இருந்தது. பரவாயில்லை; கொஞ்சம் காத்திருங்கள், ஒன்றிணைப்பினை செய்துவிட்டு தங்களுக்கு இங்கு தெரிவிக்கிறேன்.
நீங்கள் ஏற்கனவே அறிந்தபடி, ஒத்த கட்டுரைகளை ஒன்றாக இணைப்பதற்கென்று விக்கிப்பீடியாவில் கொள்கைகளும், நெறிமுறைகளும் உள்ளன. தகுந்த உள்ளடக்கங்களை ஏற்கனவே இட்டவர்களுக்கு credit இருக்கவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
உங்களின் பார்வைக்கு: விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:20, 14 மே 2023 (UTC)
கீழ்க்காணும் செய்படிகளைச் செய்துள்ளேன்:
உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 14 மே 2023 (UTC) விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:03, 15 மே 2023 (UTC)
பீடேட் அமைப்பு எனும் கட்டுரையை நீக்கப் பரிந்துரை செய்திருந்தீர்கள். இணையான ஆங்கிலக் கட்டுரைக்கு மொழியிடை இணைப்பு உள்ளது. யாராவது செம்மைப்படுத்துகிறார்களா எனப் பார்க்கலாமா? தங்களின் கருத்தினை அறிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 23 மே 2023 (UTC)
தற்போது நடைபெற்று வரும் செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபட்டு, 100 எனும் எண்ணிக்கையைக் கடந்து, கட்டுரைகளைச் செம்மைப்படுத்தி வருகிறீர்கள். இந்த அரும்பணியை செய்துவரும் தங்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். -- ஒருங்கிணைப்பாளர்கள் Sridhar G, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 14 சூன் 2023 (UTC)
செம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் Booradleyp1, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 105 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஸ்ரீதர். ஞா (✉) 15:12, 2 சூலை 2023 (UTC)
வணக்கம்.
அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!
திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
பாலியத்து அச்சன்கள் என மாற்றியாகிவிட்டது அம்மா. நன்றி--Balu1967 (பேச்சு) 14:51, 12 அக்டோபர் 2023 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. நினைவுப் பரிசு பெற இந்தப் படிவத்தை நிரப்பி உதவவும் நன்றி.-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா (✉) 10:26, 14 அக்டோபர் 2023 (UTC)
வணக்கம். வரைவு:வகுபடும் தன்மை விதி பக்கத்திலுள்ள உள்ளடக்கங்களை சரிபார்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 21 திசம்பர் 2023 (UTC)
வணக்கம். ஒரு வரைவுக் கட்டுரையை, நிர்வாக அணுக்கம் இல்லாத பயனரால் பொதுவெளிக்கு வழிமாற்று இல்லாமல் நகர்த்த இயலுமா என்பதனை அறிய விரும்புகிறேன். வரைவு:சோதனை டிசம்பர் எனும் வரைவை வழிமாற்று இல்லாமல் நகர்த்த முயற்சி செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டல் நிகழ்படம் உருவாக்குவதற்கு உதவிகரமாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:41, 28 திசம்பர் 2023 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.
சில குறிப்புகள்:
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.
மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 பெப்பிரவரி 2024 (UTC)
வணக்கம், en:Odious number இதற்குத் தமிழ்ச் சொல் உண்டா? முடிந்தால் இதனைத் தமிழாக்கம் செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:52, 7 ஏப்பிரல் 2024 (UTC)
வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,66,846 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 4 சூன் 2024 (UTC)
வணக்கம். WikiProject Mathematics எனும் ஆங்கிலப் பக்கத்திற்கு இணையான விக்கித்திட்டம் கணிதம் எனும் பக்கத்தை தொடங்கியுள்ளேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் விக்கித்திட்டம் எனும் கருத்துருவை தமிழ் விக்கிப்பீடியாவிலும் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக விக்கித்திட்டம் கணிதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டப் பணியாக, நீங்கள் உருவாக்கும் கணிதம் குறித்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் {{விக்கித்திட்டம் கணிதம்}} என்பதனை இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வார்ப்புரு இடப்படும் கட்டுரைகள், பகுப்பு:விக்கித்திட்டம் கணிதம் கட்டுரைகள் எனும் பகுப்பில் பட்டியலாக சேரும். இவ்வாறு செய்வதன் காரணமாக, கணிதம் குறித்தான கட்டுரைகளின் பட்டியல் இற்றையாகிக் கொண்டே இருக்கும்.
குறிப்புகள்:
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:27, 12 சூன் 2024 (UTC)
வணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அன்புடன் அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:45, 14 சூன் 2024 (UTC)
வணக்கம். இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு நன்றிகள்! சூலை மாதத்தை இந்தப் பணிக்கான சிறப்பு மாதமாக அறிவித்துள்ளோம். உங்களால் நேரடி தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனில், சூலை 13 அன்று இணையம் வழியே நம் குழுவினருடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறேன். இங்கு உங்களின் விருப்பத்தை இட்டால், மற்றவர்களுக்கு ஊக்கப்படுத்துதலாக அமையும். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:00, 2 சூலை 2024 (UTC)
வணக்கம். இந்த நிகழ்வு நடைபெறுவதையொட்டி, புதிய பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:28, 12 சூலை 2024 (UTC)
இந்த நிகழ்வை ஆவணப்படுத்தும் பொருட்டு, இந்தப் பக்கத்தில் தங்களின் கையொப்பம் இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:59, 14 சூலை 2024 (UTC)
வணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.