படிமம்:Pottuvil.jpgஎனது ஊர் - பொத்துவிலின் அழகிய தோற்றமொன்று.ன்புடன் எனது பயனர் பக்கத்திற்கு தங்களை வரவேற்கின்றேன். முதலில் வணக்கம். நான், தாரிக் அஸீஸ். அரபுச் சொல்லான தாரிக் என்பதன் தமிழ் அர்த்தம் உதய தாரகை என்பதனால், அதனை எனது நிறம் வலைப்பதிவின் பதிவுகளில் பாவிக்கிறேன். நேரமிருந்தால் நிறம் வலைப்பக்கம் வந்து வணக்கம் சொல்லுங்கள்.:) நுட்பங்கள் தொடர்பில் எனக்குள்ள அலாதிப்பிரியம், கணினியும் கணினி சார்ந்த விடயங்களின் பாலான எனது தேடலையும் கற்றலையும் வேகமாக்கியதெனலாம். மொழி, வரைகலை, வாழ்க்கை, செய்நிரலாக்கம் என பரந்து விரிந்த அத்தனை விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்கின்ற அதீத ஆர்வம் எப்போதுமுண்டு. தமிழ் மொழியில் அழகிய ஆக்கபூர்வமான யோசனைகள் பரவ வேண்டும் என்பதற்காய், TED சொற்பொழிவுகளை, தமிழாக்கம் செய்வதன் செயற்றிட்டத்தின் மொழி இணைப்பாளராகவும் பணி செய்கிறேன். திறந்தமூல செயற்பாடுகளில் ஆர்வமிருப்பதனால், திறந்தமூல பணிசெயல் முறைமைகளின் செய்நிரல்களின் மொழி மாற்றத்தில் பங்களிப்பதுமுண்டு. மகாகவி பாரதி சொன்ன பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை. விக்கிப்பீடியாவில் எண்ணற்ற அறிவு பொதிந்து கிடக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புகள் பற்றி நீங்கள் கீழே காணலாம். எந்தன் பயனர் பக்கம் வந்த நீங்கள் எனக்குத் தகவல் சொல்ல அல்லது வணக்கம் சொல்ல, எனது பேச்சுப் பக்கத்திற்கு வாருங்கள். நன்றி. அழகிய தமிழில் அறிவு சேர்ப்போம்!:)