பப்புவா நியூ கினி
From Wikipedia, the free encyclopedia
பப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (Independent State of Papua New Guinea) என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது.[2]
விரைவான உண்மைகள் Papua Niuginiபப்புவா நியூ கினிPapua New Guinea, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Papua Niugini பப்புவா நியூ கினி Papua New Guinea | |
---|---|
குறிக்கோள்: வேற்றுமையில் ஒற்றுமை | |
நாட்டுப்பண்: O Arise, All You Sons [1] | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மொரெசுபி துறை |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் டொக் பிசின்,இரி மொடு |
அரசாங்கம் | அரசியலைப்புச்சட்ட முடியாட்சி |
• அரசர் | மூன்றாம் சார்லசு |
• ஆளுனர் | பாப் தாடே |
• பிரதமர் | ஜேம்ஸ் மராப் |
விடுதலை | |
• சுயாட்சி | டிசம்பர் 1 1973 |
• விடுதலை | செப்டம்பர் 16 1975 |
பரப்பு | |
• மொத்தம் | 462,840 km2 (178,700 sq mi) (54வது) |
• நீர் (%) | 2 |
மக்கள் தொகை | |
• யூலை 2005 மதிப்பிடு | 5,887,000 (104 ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $14.363 பில்லியன் (126வது) |
• தலைவிகிதம் | $2,418 (131வது) |
மமேசு (2003) | 0.523 தாழ் · 137வது |
நாணயம் | கினா (PGK) |
நேர வலயம் | ஒ.அ.நே+10 (அவுஸ்திரேலிய கிழக்கு சீர் நேரம்) |
ஒ.அ.நே+10 (பயன்பாட்டில் இல்லை) | |
அழைப்புக்குறி | 675 |
இணையக் குறி | .pg |
மூடு
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசராக மூன்றாம் சார்லசும், ஆளுநராக பாப் தாடேவும், பிரதம மந்திரியாக ஜேம்ஸ் மராபும் உள்ளனர்.