![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/One-belt-one-road.svg/langta-640px-One-belt-one-road.svg.png&w=640&q=50)
பட்டை ஒன்று பாதை ஒன்று
From Wikipedia, the free encyclopedia
பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையும், 21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப் பாதையும் (சீனம்: 丝绸之路经济带和21世纪海上丝绸之路) என்பது சீன மக்கள் குடியரசு முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறியும், சட்டகமும் ஆகும். இது பட்டையும் பாதையும் அல்லது பட்டை ஒன்று, பாதை ஒன்று (சீனம்: 一带一路; பின்யின்: Yídài yílù) அல்லது பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு என்றும் வழங்கப்படுகிறது. முதன்மையாக யூரேசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்ட இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. சீனா உலக நடப்புகளில் தமது பங்களிப்பைக் கூடுதலாக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவும், தாம் மிகை உற்பத்தி செய்யும் எஃகு போன்ற பொருட்களின் ஏற்றுமதி கருதியும் இந்த செயல்திட்டத்தை முன்னெடுப்பதாகக் கருதப்படுகிறது.[1]
![]() பட்டை ஒன்று பாதை ஒன்று
மற்றும் தொடர்புடைய திட்டப் பணிகள் | |
சுருக்கம் | BRI |
---|---|
உருவாக்கம் | 2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013) 2017 (2017) (கூட்டம்) 2019 (கூட்டம்) 2023 (கூட்டம்) |
நிறுவனர் | ![]() |
சட்ட நிலை | செயல்பாட்டில் உள்ளது |
நோக்கம் | பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான வணிகப் போக்குவரத்தை ஊக்குவிப்பது |
தலைமையகம் |
|
வலைத்தளம் | www![]() |
சீனக் குடியரசின் தலைவர் சீ சின்பிங் செப்டம்பர் 2013 இல் பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையையும், அக்டோபர் 2013 இல் பட்டு கடற்பெருவழியையும் அறிவித்தார்.