பட்டாணி மாநிலம்
தாய்லாந்தில் உள்ள ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
பட்டாணி (ஆங்கிலம்: Pattani; தாய்: ปัตตานี); ஜாவி; ڤطاني ) என்பது தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் அமைந்த மாநிலம். இந்த மாநிலத்தின் தலைநகரம் பட்டாணி நகரம் ஆகும். இந்த மாநிலத்திற்கு அருகில் நாரதிவாட் (Narathiwat); சோங்கலா (Songkhla); சத்துன் (Satun); யாலா (Yala); ஆகிய மாநிலங்கள் உள்ளன.
விரைவான உண்மைகள் பட்டாணி, நாடு ...
பட்டாணி | |
---|---|
மாநிலம் | |
Pattani | |
நாடு | தாய்லாந்து |
மாநிலம் | பட்டாணி |
தலைநகரம் | பட்டாணி நகரம் |
அரசு | |
• ஆளுநர் | நின்கான் பூன்லுவாங் Niphan Boonluang (2021) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,940 km2 (750 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தாய்லாந்து மாநிலங்கள் 68-ஆவது நிலை |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 7,18,077 |
• தரவரிசை | தாய்லாந்து மாநிலங்கள் 37-ஆவது நிலை |
• அடர்த்தி | 370/km2 (1,000/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தாய்லாந்து மாநிலங்கள் 9-ஆவது நிலை |
அடைவுக் குறியீடு | |
• (2017) | 0.4950 "low" தாய்லாந்து மாநிலங்கள் 74-ஆவது நிலை |
நேர வலயம் | தாய்லாந்து நேரம் |
தாய்லாந்து அஞ்சல் சுட்டு எண் | 94xxx |
தாய்லாந்து தொலைபேசி குறியீடு எண் | 073 |
இணையதளம் | www |
மூடு
பட்டாணி மாநிலம் தீபகற்ப மலேசியா பெருநிலப்பகுதியில், தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) கடற்கரையுடன் ஒட்டி அமைந்து உள்ளது. தெற்கில் சங்கலகிரி மலைத்தொடர் (Sankalakhiri Mountain Range) உள்ளது. அந்த மலைத் தொடரில் புடோ-சு-நிகை பாடி தேசிய பூங்கா (Budo-Su-ngai Padi National Park), மற்றும் யாலா; நாரதிவாட் மாநிலங்களின் எல்லைகள் உள்ளன.
இந்த மாநிலத்தின் 110 சதுர கி.மீ.; அதாவது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 5.6 விழுக்காடு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு உள்ளது.[3]