From Wikipedia, the free encyclopedia
படன்காஸ் (Batangas) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் படன்காஸ் நகரம் ஆகும். இது 1581 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 1,078 கிராமங்களும், 31 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஹேர்மிலென்டோ மன்டனாஸ் (Hermilando Mandanas) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,119.75 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக படன்காஸ் மாகாணத்தின் சனத்தொகை 2,694,335 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 44ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 7ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம், ஆகிய மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சிக் கத்திகளுக்க்கு படன்காஸ் மாகாணம் மிகவும் பிரசித்தமானது ஆகும். அத்துடன் இக்கத்திகள் உற்பத்தி மூலம் பல கைத்தொழில் பேட்டைகள் இம்மாகாணத்தில் உருவாகியுள்ளன.
படன்காஸ் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கலபர்சொன் |
நேர வலயம் | ஒசநே+8 (PHT) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.