பஞ்சகூட சமணர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

பஞ்சகூட சமணர் கோயில்map

பஞ்சகூட சமணர் கோயில் (Panchakuta Basadi), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், கம்பதஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பஞ்சகூட சமணர் கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
பஞ்சகூட சமணர் கோயில்
Thumb
பஞ்சகூட சமணர் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கம்பதஹள்ளி, மாண்டியா மாவட்டம், கர்நாடகா
புவியியல் ஆள்கூறுகள்12°52′03.6″N 76°38′00.8″E
சமயம்சமணம்
மூடு

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு அர்பணிக்கப்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகள் கொண்ட பஞ்சகூட சமணக் கோயில், மேலைச் சாளுக்கியர் ஆட்சியின் போது[1], (கிபி 900 - 1000) திராவிடக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டதாகும்.[2][3]

கம்பதஹள்ளி எனும் கன்னட மொழிச் சொல்லிற்கு தூண்களின் கிராமம் எனும் பொருளாகும். கம்பதஹள்ளி கிராமத்தின் சமணக் கோயில், சமணத்தின் தொன்மையான ஊரான சரவணபெலகுளாவிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.

போசாளர்கள் ஆட்சியில் இக்கோயில் சீரமைத்துக் கட்டப்பட்டது. [4] இக்கோயில் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறித்துள்ளது. [3][1][5]

கோயில் அமைப்பு & சிற்பங்கள்

Thumb
திறந்த வெளி மண்டபம்
Thumb
திறந்த வெளி மண்டபம்
Thumb
சிற்ப வேலைபாடுகள் கொண்ட மண்டபத் தூண்கள்

இக்கோயில் மூன்று அர்த்த மண்டபங்கள் மற்றும் மகாமண்டபங்களுடன் கூடிய மூன்று மூலவர்களின் சன்னதிகளைக் கொண்டது. சன்னதிகளின் நுழைவாயில்களில் திக்பாலர்கள் தங்கள் துணைவியர்களுடனும் வாகனங்களுடனும் உள்ளனர். கோயிலின் வடக்கு நோக்கிய பிரம்மதேவத் தூண் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய மூலவரான ரிசபநாதரின் சன்னதியின் வலப்புறத்தில் சாந்திநாதர் சன்னதியும்; இடப்புறத்தில் நேமிநாதர் சன்னதியும் உள்ளது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களின் மேற்புறத்தில் சமணக் காவல் தேவதைகளான யட்சர்கள், யட்சினிகளின் சிற்பங்கள் உள்ளன. [3][6]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.