பங்கான்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பங்கான் (Bangaon), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்படவுள்ள இச்சாமதி மாவட்டத்தின்[2][3] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் வங்காள தேசம் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. முன்னர் இந்நகரம் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் இருந்தது.
பங்கான் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இச்சாமதி மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23.07°N 88.82°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | இச்சாமதி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பங்கான் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 14.27 km2 (5.51 sq mi) |
ஏற்றம் | 7 m (23 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,08,864 |
• தரவரிசை | UA: 30th in West Bengal |
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 743235 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-WB |
மக்களவைத் தொகுதி | பன்கான் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பங்கான் வடக்கு |
இணையதளம் | north24parganas.nic.in |
பங்கான் நகரம், கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில், இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
3 நடைமேடைகள் கொண்ட பங்கான் சந்திப்பு தொடருந்து நிலையம் [4] கொல்கத்தா போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பன்கான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,864 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 55,382 மற்றும் 53,482 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 8,863 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 89.70% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.66%, இசுலாமியர்கள் 2.85%, கிறித்துவர்கள் 0.25 % மற்றும் பிறர் 0.48% ஆக உள்ளனர். [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.