நூப்ரா பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ள ஒரு வருவாய் வட்டம் ஆகும். இவ்வட்டத்தில் துர்டுக் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது லே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான லே நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல லே நகரத்தில் இருந்து கார்துங்க் லா கணவாய் வழியாக பயணம் செய்ய வேண்டும்.[1] இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.
விரைவான உண்மைகள் நூப்ரா பள்ளத்தாகு, நாடு ...
நூப்ரா பள்ளத்தாகு | |
---|---|
நகரம் மற்றும் கிராமங்கள் | |
ஆள்கூறுகள்: 34.6°N 77.7°E / 34.6; 77.7 | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | நூப்ரா பள்ளத்தாக்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு