![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Lymphoma_macro.jpg/640px-Lymphoma_macro.jpg&w=640&q=50)
நிணநீர்க்குழியப் புற்றுநோய்
From Wikipedia, the free encyclopedia
நிணநீர்க்குழியப் புற்றுநோய் (Lymphoma) என்பது வெண்குருதியணுக்களில் ஒரு வகையான நிணநீர்க்குழியங்களில் இருந்து உருவாகும் இரத்தப் புற்றுநோய்களின் குழு ஆகும்.[7] இந்நோயின் அறிகுறிகள் வலியில்லா வீக்கம்கொண்ட நிணநீர்க்கணுக்கள், காய்ச்சல், பெரும்பாலும் இரவில் ஏற்படும் நனையுமளவு வியர்வைப்பெருக்கு, திட்டமிடப்படாத எடை இழப்பு, அரிப்பு, மற்றும் தொடர்ந்து சோர்வாக உணர்தல்.[1][2]
நிணநீர்ப்புற்று அல்லது லிம்போமா | |
---|---|
![]() | |
நிணநீர்க்கணுவை இடமாற்றும் கருவணு வளர் நிணநீர்ப்புற்று | |
சிறப்பு | குருதியியல் மற்றும் புற்றுநோயியல் |
அறிகுறிகள் | வீங்கிய நிணநீர்க்கணுக்கள், காய்ச்சல், அதிக வியர்வைப் போக்கு, எடை இழப்பு, அரிப்பு, சோர்வு[1][2] |
சூழிடர் காரணிகள் | எப்ஸ்டைன்-பார் வைரஸ், தன்னுடல் தாக்குநோய்s, எயிட்சு, புகையிலை பிடித்தல்[2][3] |
நோயறிதல் | நிணநீர்க்கணுத் திசு ஆய்வு[1][2] |
சிகிச்சை | வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம், மூலக்கூறிலக்கு மருத்துவம், அறுவைச் சிகிச்சை[1][2] |
முன்கணிப்பு | சராசரி ஐந்தாண்டு உய்வு 85% (USA)[4] |
நிகழும் வீதம் | 4.9 மில்லியன் (2015)[5] |
இறப்புகள் | 204,700 (2015)[6] |
தாமஸ் ஹாட்ஜ்கின் 1832 ஆம் ஆண்டில் அவருடைய பெயரால் வழங்கப்பட்டுவரும் லிம்போமாவின் முதல் விளக்கத்தை வெளியிட்டார்.[8] அப்போதிருந்து, லிம்போமாவின் பல வடிவங்கள் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன.
ஹாட்ஜ்கின் லிம்போமாவிற்கான மறையிடர் காரணிகள் எப்ஸ்டைன்-பார் வைரஸ் தொற்று மற்றும் குடும்பத்தில் நோய்தாக்கப்பட்ட வரலாறு ஆகியவை. ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாக்களின் பொதுவான காரணிகளில் தன்னுடல் தாக்குநோய்கள், எயிட்சு, மனித டி-லிம்போட்ரோபிக் வைரஸ் தொற்று, நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் மற்றும் சில பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அடங்கும்.[9] அதிக அளவு சிவப்பு இறைச்சியை உண்பதும் புகையிலை புகைப்பதும் ஆபத்தை அதிகரிக்கும்.[3][10][11]
லிம்போமா பெரும்பாலும் நுரையீரல், கல்லீரல் மற்றும் மூளைக்கு பரவுகிறது; மைய நரம்பு மண்டலத்திற்கும் பரவக்கூடும். பெரும்பாலும் மூளையைச் சுற்றியுள்ள மூளைச் சுற்றுகளில் லிம்போமாட்டஸ் மூளைக்காய்ச்சல் (எல்.எம்) என்று அழைக்கப்படுகிறது.[12]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Blausen_0626_lymphoma.png/640px-Blausen_0626_lymphoma.png)