![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Woman_in_niqab%252C_Aleppo_%25282010%2529.jpg/640px-Woman_in_niqab%252C_Aleppo_%25282010%2529.jpg&w=640&q=50)
நிகாப்
From Wikipedia, the free encyclopedia
நிகாப் (அரபு மொழி: نِقاب) என்பது சில இசுலாமிய பெண்கள் அணியும் முகத்திரைகளில் ஒன்றாகும். பெரும்பான்மையான இசுலாமிய மதபோதகர்கள் இசுலாம் சமயத்தில் முகத்திரைக் கட்டாயப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற போதிலும் சில மதபோதகர்கள் குறிப்பாக சலாபிய நெறியைப் பின்பற்றுபவர்கள் பெண்கள் பொது இடங்களில் முகத்திரை கண்டிப்பாக அணிய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். முகத்திரை அணியும் இசுலாமியப் பெண்கள் தங்கள் உறவினரல்லாத வேற்று ஆடவரைச் சந்திக்கும் தருணங்களில் அல்லது பொது இடங்களில் இதை அணிகின்றனர்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
![Woman wearing a niqab with baby](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Woman_in_niqab%2C_Aleppo_%282010%29.jpg/640px-Woman_in_niqab%2C_Aleppo_%282010%29.jpg)
முகத்திரை அணியும் வழக்கம் இசுலாமியத் தோற்றத்தின் முன்பே அரபு கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கலாச்சாரப்படி சவுதி அராபியாவின் நஜித் எனும் இடத்திலிருந்து பரவிய முகத்திரைக் கலாச்சாரம் சலாபிய அடிப்படைவாதத்தின் மூலம் பல இசுலாமிய நாடுகளில் பரவியது.[1]
இன்று நிகாப் முகத்திரை அராபியத் தீபகற்பத்திலுள்ள அராபிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அராபிய நாடுகளல்லாத இசுலாமிய நாடுகளிலும் இக்கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. சோமாலியா, சிரியா, பாக்கித்தான், வங்காளதேசம் போன்ற இசுலாமிய நாடுகளில் சிறு அளவிலான இசுலாமியர்கள் நிகாப் முகத்திரை அணிகின்றனர். மேலும் இசுலாமிய சிறுபான்மையைக் கொண்ட இந்தியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிலும் நிகாப் முகத்திரை அணியப்படுகிறது.
நிகாப் எனும் சொல்லும் புர்கா எனும் உடையின் சொல்லும் சில இடங்களில் ஒரே அர்த்தத்தை கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனினும் நிகாபில் கண்கள் தவிர முகத்தின் ஏனைய பகுதிகள் மூடப்படுகிறது. புர்காவிலோ தலை முதல் கால் வரை உடல் முழுமையாக மூடப்பட்டு வலை போன்ற திரையினூடாக மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறது.