நிகாங் கான்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நிகாங் கான் (Nihang Khan) என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ரோபருக்கு அருகேயுள்ள கோட்லா நிகாங் கான் என்ற சிறிய ஆட்சிப் பகுதிக்கு சமீன்தாராக ஆட்சிபுரிந்தவர் ஆவார்[1].பத்தாம் சீக்கிய குருவாகிய குரு கோபிந்த் சிங்கின் நண்பராகவும் அவரைப் பின்பற்றுபவராகவும் இவர் இருந்தார். குருவும் அவரது கூட்டாளிகளும் அடிக்கடி நிகாங் கானுடன் ஒன்றாகத் தங்கி இருந்தனர், முகலாயப் படைகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகநேர்ந்த காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறு அவருடன் தங்கி வாழ்ந்து வந்தனர். நம்பிக்கை மற்றும் இனம் மூலம் நிகாங் கான் ஒரு முசுலீம் பக்தூனாக இருந்தார்[2][3].
நிகாங் கான் Nihang Khan | |
---|---|
கோட்லா நிகாங் கானில் ஆட்சி செய்தவர் | |
இந்திய பஞ்சாபிலுள்ள ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள கோட்லா நிகாங்கானின் கோட்டை |
குரு கோபிந்த் சிங்கும் மற்றும் நிகாங் கானும் முதன் முதலாக விக்ரம் சம்வாத் நாட்காட்டியின்படி 1745 ஆம் ஆண்டின் மாசி மாதத்தின் அமாவாசையில் சந்தித்தார்[1] குரு கோவிந்தைக் கண்டு அவரால் ஈர்க்கப்பட்ட நிகாங் கான் தனக்குச் சொந்தமான அனைத்தையும் குரு கோவிந்துக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.[1] கானை கௌரவிக்கும் விதமாக சீக்கிய மத இலக்கியங்கள் பாய் நிகாங் கான் என்று சிறப்பித்தன[4]. பாய் ஆலம்கான் எனப்படுபவர் நிகாங் கானின் பிள்ளைகளில் ஒருவராவார். குரு கோவிந் சிங் 1694 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் நடைபெற்ற பாய் ஆலம் காணின் திருமண விழாவில் கலந்துகொண்டார்[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.