நாற்கரிச்சர்க்கரை
From Wikipedia, the free encyclopedia
நாற்கரிச்சர்க்கரை (tetrose) என்பது நான்கு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். நாற்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ நாற்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ நாற்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். எரித்ரோஸ் ஒரு நாற்கரி ஆல்டோ சர்க்கரை ஆகும். எரித்ருலோஸ் ஒரு நாற்கரி கீட்டோ சர்க்கரை ஆகும்.
- D-எரித்ரோஸ்
- D-த்ரியோஸ்
- D-எரித்ருலோஸ்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஆல்டோ நாற்கரிச்சர்க்கரைகள் இரண்டு சமச்சீரற்ற கரியணுக்களைக் கொண்டுள்ளன. எனவே நான்கு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ரோஸ் மற்றும் திரியோஸ் என இரண்டு வடிவங்களே உள்ளன.
கீட்டோ நாற்கரிச்சர்க்கரைகள் ஒரே ஒரு சமச்சீரற்ற கரியணுவை மட்டுமே உடையவை. எனவே இரண்டு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ருலோஸ் என ஒரு வடிவம் மட்டுமே காணப்படுகிறது.
உயிர்வேதியியல் தொடர்பான இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |