![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/NR_Pogson.jpg/640px-NR_Pogson.jpg&w=640&q=50)
நார்மன் இராபர்ட் போகுசன்
பிரித்தானிய வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
நார்மன் இராபர்ட் போகுசன் (Norman Robert Pogson), இ பே து (CIE) (23 மார்ச்சு 1829 – 23ஜூன் 1891) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் சென்னை வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்;வால்வெள்ளிகளின் நோக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். இவர் உடுக்கண பருமைகளுக்கான கணிதவியல் அளவுகோலை உருவாக்கியுள்ளார். இது போகுசன் விகிதம் அல்லது தோற்றநிலைப் பருமைகளின் விகிதம் என வழங்கப்படுகிறது. இது இரு தொடர்நிலைப் பருமைகளின் விகிதமாகும். இது நூறு எனும் எண்ணின் ஐந்தாம் வருக்க மூலமாக (~2.512) அமைகிறது.[1]
விரைவான உண்மைகள் நார்மன் இராபர்ட் போகுசன் <> Norman Robert Pogson, பிறப்பு ...
நார்மன் இராபர்ட் போகுசன் <> Norman Robert Pogson | |
---|---|
![]() | |
பிறப்பு | (1829-03-23)23 மார்ச்சு 1829 நாட்டிங்காம், இங்கிலாந்து |
இறப்பு | 23 சூன் 1891(1891-06-23) (அகவை 62) சென்னை, இந்தியா |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1856) |
மூடு