நர்க்கொண்டம் தீவு
இந்திய தீவு / From Wikipedia, the free encyclopedia
நர்க்கொண்டம் அல்லது நரகக்குன்றம் தீவு அந்தமான் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய எரிமலை தீவு ஆகும். தீவின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 710 மீ உயரத்திற்கு உயர்கிறது, மேலும் இது அண்டிசைட் எனப்படும் எரிமலைப் பாறைகளால் உருவானது. இது அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாகும், இதன் முக்கியப்பகுதி மேற்கு நோக்கி சுமார் 124 km (77 mi) உள்ளது . நர்க்கொண்டம் தீவு இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். சுமார் 6.8 சதுர கிலோமீட்டர் பரப்பளஉ உடைய இந்த தீவு சிறியதாகும். இது ஒரு செயலற்ற எரிமலை என இந்திய புவியியல் ஆய்வு மையம் வகைப்படுத்தியது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
அந்தமான் தீவுகளின் எல்லைக்கோட்டுப் படம், சற்று தள்ளி சிவப்பு நிற வட்டத்தில் நர்க்கொண்டம் தீவு காட்டப்பட்டுள்ளது. | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13.45°N 94.27°E / 13.45; 94.27 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 7.63 km2 (2.95 sq mi) |
நீளம் | 4 km (2.5 mi) |
அகலம் | 3.0 km (1.86 mi) |
கரையோரம் | 12.22 km (7.593 mi) |
உயர்ந்த ஏற்றம் | 710 m (2,330 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 16 |
அடர்த்தி | 2.1 /km2 (5.4 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
அஞ்சல் குறியீட்டு எண் | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் நர்க்கொண்டம் மலை, உயர்ந்த புள்ளி ...
நர்க்கொண்டம் மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 710 m (2,330 அடி) |
பட்டியல்கள் | |
புவியியல் | |
அமைவிடம் | அந்தமான் தீவுகள், இந்தியா |
நிலவியல் | |
மலையின் வகை | சுழல் வடிவ எரிமலை |
கடைசி வெடிப்பு | Unknown |
மூடு