நய்யாலா மான்
மறிமான் இனம் / From Wikipedia, the free encyclopedia
Euteleostomi
நய்யாலா Nyala | |
---|---|
கிடாய் | |
பெட்டை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Bovinae |
பேரினம்: | Tragelaphus |
இனம்: | T. angasii |
இருசொற் பெயரீடு | |
Tragelaphus angasii (Angas, 1849) | |
புவியியல் எல்லை | |
வேறு பெயர்கள் [2] | |
|
தாழ்நில நய்யாலா அல்லது வெறுமனே நய்யாலா ( lowland nyala or simply nyala ) என அழைக்கப்படுவது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு முறுக்கிய கொம்புகளைக் கொண்ட ஒரு மறிமான் ஆகும். இது மாட்டுக் குடும்பம் மற்றும் ட்ரேஜெலாபஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு இனமாகும். இது முன்னர் நயாலா பேரினத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது முதன்முதலில் 1849 இல் ஜார்ஜ் பிரஞ்சு அங்கஸ் என்பவரால் விவரிக்கப்பட்டது . இதன் உடல் நீளம் 135–195 செமீ (53–77 அங்குலம்), மற்றும் எடை 55–140 கிலோ (121–309 பவுண்டு) ஆகும். பெடைகள் மற்றும் இளம் பருவ மான்களின் உடல் அரக்கு அல்லது செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் வயது வந்த கிடாய்கள், பெரும்பாலும் நீல நிறத்துடன் கூடிய அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வளரும். பெட்டைகள் மற்றும் இளம் ஆண்களின் உடலின் பக்கங்களில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வெள்ளைப் பட்டைகள் இருக்கும். கிடாய்களுக்கு மட்டுமே 60-83 செமீ (24-33 அங்குலம்) நீளமும், மஞ்சள் முனையும் கொண்ட கொம்புகள் உள்ளன. இந்த முறுக்கிய கொம்பு இந்த விலங்கிடையையான பால் ஈருருமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நய்யாலா முக்கியமாக அதிகாலையிலும், பிற்பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கும். இது பொதுவாக பகலில் 20–30 °C (68–86 °F) வெப்பநிலையாக இருந்தாலும், மழைக்காலத்திலும் இரவில் உலாவுகிறது. தாவர உண்ணியான நய்யாலா இலைகள், பழங்கள், புற்கள் போன்றவற்றை உண்கிறது. மேலும் இதற்கு போதுமான நன்னீர் தேவைப்படுகிறது. கூச்ச சுபாவமுள்ள விலங்கான இது, திறந்தவெளியில் நீர்ருந்துவதை விட குட்டைகளையே விரும்புகிறது. நயயாலாக்கள் தங்களுக்கென பிராந்திய எல்லையை வகுத்துக் கொள்ளாது. இவை மிகவும் எச்சரிக்கையான உயிரினங்களாகும். இவை 10 வரையிலான எண்ணிக்கையில் ஒற்றை பாலினமாகவோ அல்லது கலப்பு குடும்பக் குழுக்களாகவோ வாழ்கின்றன. ஆனால் வயதான கிடாய்கள் தனியாக வாழ்கின்றன. இவை அடர்த்தியான மற்றும் வறண்ட சவன்னா காடுகளுக்குள் வாழ்கின்றன. நய்யாலாவை வேட்டாயாடுவையாக சிங்கம், சிறுத்தை, ஆப்பிரிக்க காட்டு நாய் போன்றவை ஆகும். வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் இனச்சேர்க்கை உச்ச நிலையை அடைகிறது. கிடாக்களும், பெட்டைகளும் முறையே 18 மற்றும் 11-12 மாதங்களில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இருப்பினும் அவை ஐந்து வயது வரை சமூக ரீதியாக முதிர்ச்சியடைவதில்லை. ஏழு மாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு, ஒரு குட்டி பிறக்கிறது.
நய்யாலா வாழக்கூடிய பகுதியாக மலாவி, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, சாம்பியா, சிம்பாப்வே ஆகியவை உள்ளன. இது போட்சுவானா, நமீபியா போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 1950 களில் இருந்து அழிந்துபோன எசுவாத்தினிக்கு மீண்டும் கொண்டு செல்லபட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எண்ணிக்க நிலையாக உள்ளது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. வேட்டையாடுதல் மற்றும் மனித குடியேற்றத்தின் விளைவாக ஏற்படும் வாழ்விட இழப்பு ஆகியவை இந்த இனங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக உள்ளன.